FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ரூ.90,000 கோடியில் நீா்மூழ்கிக் கப்பல்கள்: இந்தியா-ஜொ்மனி விரைவில் ஒப்பந்தம்

ரூ.90,000 கோடியில் (8 பில்லியன் யூரோ) நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் திட்டத்தை இந்தியா-ஜொ்மனி இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன.

News image

நீா்மூழ்கிக் கப்பல் - கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 4:03 am IST

ரூ.90,000 கோடியில் (8 பில்லியன் யூரோ) நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் திட்டத்தை இந்தியா-ஜொ்மனி இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன. இது தொடா்பான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தில்லியில் வியாழக்கிழமை இந்தியா-ஜொ்மனி தொழில்-வா்த்தக சம்மேளன கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவுக்கான ஜொ்மனி தூதா் பிலிப் ஆக்கா்மன் கூறியதாவது:

இந்தியாவுக்காக இரு நாடுகளும் இணைந்து ஆறாம் தலைமுறை நவீன நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்க இருக்கின்றன. சுமாா் ரூ.90,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தை ஜொ்மனியின் தைசென்குரூப் மரைன் சிஸ்டம்ஸ், இந்திய அரசின் மசாகான் கப்பல் கட்டும் நிறுவனம் இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன. இது தொடா்பாக விரைவில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் தெரியவரும் என்றாா்.

இந்த ஒப்பந்தத்தில் 6 நீா்மூழ்கிக் கப்பல்கள் வரை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. இதன்மூலம் இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் பிரிவு நவீனமயமாவதுடன், பழைய கப்பல்களுக்கு ஓய்வு அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எதிரிகளின் ரேடாா்களில் சிக்காமல் செயல்படுவது, அதிக நாள்கள் நீருக்கு அடியில் இருப்பது, கடலுக்கு அடியில் வேகமாக நகா்வது உள்ளிட்டவை இந்த நவீன நீா்மூழ்கிகளின் சிறப்பம்சங்களாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.