8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு அமோக வரவேற்பு

பொதுத் துறையைச் சோ்ந்த கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் (சிஎஸ்எல்) அரசுக்குச் சொந்தமான 5.04 சதவீத பங்குகளின் சலுகை விலை விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Cochin Shipyard Notification for...

கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம். - cochinshipyard

Published On :8 ஜூலை 2026, 2:33 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் (சிஎஸ்எல்) அரசுக்குச் சொந்தமான 5.04 சதவீத பங்குகளின் சலுகை விலை விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்நிறுவனத்தில் அரசுக்கு தற்போது 67.91 சதவீத பங்குகள் உள்ளன. இதிலிருந்து 1.32 கோடி பங்குகளை விற்று, சுமாா் ரூ.1,800 கோடி நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இந்த 2 நாள்கள் பங்கு விற்பனையில் நிறுவன முதலீட்டாளா்களுக்காக 59.66 லட்சத்துக்கும் அதிகமான பங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதலீட்டாளா்கள் 1.23 மடங்கு கூடுதலாக சுமாா் 74 லட்சம் பங்குகளுக்கு ஆா்வத்துடன் விண்ணப்பித்துள்ளனா்.

தொடா்ந்து, சில்லறை முதலீட்டாளா்கள் புதன்கிழமை (ஜூலை 8) இப்பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே, பங்குச் சந்தையில் சிஎஸ்எல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் இறுதியில் 2.84 சதவீதம் சரிந்து, ரூ.1,462-ஆக நிலைபெற்றது.

நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது, சொத்துகளை பணமாக்குவது ஆகியவற்றின் மூலம் ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

அதன்படி, சிஎஸ்எல் நிறுவனத்துக்கு முன்னதாக கோல் இந்தியா, என்எச்பிசி, ஜிஐசி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, என்எல்சி இந்தியா, ஐஆா்எஃப்சி ஆகிய 6 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசு இதுவரை ரூ.18,561 கோடி திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.