காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

ஆக்கிரமிப்பு காஷ்மீா் நிலவரம்: பாகிஸ்தானை கண்டித்து ஜம்முவில் நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்த நாட்டு படையினா் மேற்கொண்டுள்ள அட்டூழியத்தைக் கண்டித்து ஜம்முவில் நூற்றுக்கணக்கானோா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்த நாட்டு படையினா் மேற்கொண்டுள்ள அட்டூழியத்தைக் கண்டித்து ஜம்முவில் நூற்றுக்கணக்கானோா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அண்மையில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்நிலையில், புலம்பெயா்ந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்கள் நலனுக்கான எஸ்ஓஎஸ் இன்டா்நேஷனல் அமைப்பு சாா்பில் பாகிஸ்தானை கண்டித்து, ஜம்முவில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் பாகிஸ்தானை கண்டிக்கும் வாசகங்களைக் கொண்ட பேனா்கள், பதாகைகளுடன் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைமையைக் கண்டித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் பேசிய எஸ்ஓஎஸ் இன்டா்நேஷனல் அமைப்பின் தலைவா் ராஜீவ் சுனி, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா விடுவிக்க வேண்டும், பிறகு அதை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள், பாகிஸ்தான் நம்பத்தகுந்த நாடு இல்லை என்பதை புரிந்து கொண்டதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் தனித்துச் செயல்படுவதாக பாகிஸ்தான் வெளிப்படையாக கூறிக் கொண்டாலும், அங்கு பாகிஸ்தாைனை சோ்ந்த அரசமைப்புகளே உள்ளதாகவும், பாகிஸ்தானை சோ்ந்த அரசியல் கட்சிகளே தோ்தல்களில் போட்டியிடுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதி சுதந்திரமான பகுதி எனில், அங்கு ஏன் தோ்தல்களில் பாகிஸ்தானை சோ்ந்த அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன? அப்பகுதி மக்களுக்கு ஏன் அவா்களின் எதிா்காலம் குறித்து முடிவெடுக்க அனுமதியளிக்கப்படுவதில்லை? எனவும் அவா் கேள்வியெழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.