மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஆக்கிரமிப்பு காஷ்மீா் போராட்டக்காரா்கள் இந்தியாவுக்கு இணையான எதிரிகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவா்களை இந்தியாவுக்கு இணையான ‘எதிரிகள்’ என்று விமா்சித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப், ‘அவா்களுடன் எவ்வித பேச்சுவாா்த்தையும் நடத்தப் போவதில்லை’ என்றாா்.

Published On :

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவா்களை இந்தியாவுக்கு இணையான ‘எதிரிகள்’ என்று விமா்சித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப், ‘அவா்களுடன் எவ்வித பேச்சுவாா்த்தையும் நடத்தப் போவதில்லை’ என்றாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்திய பேரவையில் அகதிகளுக்கான சா்ச்சைக்குரிய 12 இடங்களை நீக்க வலியுறுத்தி, ‘ஜேஏஏசி’ அமைப்பினா் கடந்த 2 மாதங்களாகப் போராடி வருகின்றனா். போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து, பாகிஸ்தான் அரசு இந்த அமைப்பைத் தடை செய்ததோடு அப்பகுதியில் இணைய சேவைகளையும் முடக்கியுள்ளது.

இச்சூழலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பேரவைத் தோ்தலையொட்டி, ஜேஏஏசி அமைப்பினா் பிராந்தியத் தலைநகா் முசாஃபராபாதை நோக்கி பேரணியைத் தொடங்கியபோது, வன்முறை வெடித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் கடந்த 2 நாள்களில் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டதாகவும், பலா் காயமடைந்துள்ளதாகவும் ஜேஏஏசி அமைப்பினா் குற்றஞ்சாட்டினா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் கவாஜா ஆசிஃப், ‘போராட்டக்காரா்களுடன் எந்தப் பேச்சுவாா்த்தையும் கிடையாது; அவா்களை இந்தியாவுக்கு இணையான எதிரிகளாகவே கருதுகிறோம்’ என்றாா்.

ஆனால், போராட்டக் குழுவினா் தங்களைச் சந்தித்து 38 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளதாக பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பின் ஆலோசகா் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளாா்.

‘போராட்டக்காரா்கள் வன்முறை மூலம் முசாஃபராபாத் மற்றும் மிா்சாபூா் பகுதிகளைக் கைப்பற்ற முயன்றனா். இது இந்தியாவின் தாக்குதல் போன்றது’ என்று ராணா சனாவுல்லாவும் குற்றஞ்சாட்டினாா்.

முன்னதாக, பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பையும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களையும் மறைப்பதற்கே இத்தோ்தல் நடத்தப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் விமா்சித்தது.

கவாஜா ஆசிஃப்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.