பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம் வெளியீடு: ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப் பதிவு!

மேற்கு தில்லியில் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டது பற்றி..

News image

சௌரப் பரத்வாஜ் - file photo

Updated On :2 ஜூன் 2026, 2:10 pm IST

மேற்கு தில்லியில் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாக, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவர் சௌரப் பரத்வாஜ் மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனக்புரி காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 72-இன் (குறிப்பிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடுதல் போன்றவை) சிறார் நீதிச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்ஸோ) விதிகளின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

மேற்கு தில்லியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் 57 வயதுடைய ஊழியர் ஒருவரால் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தாய் காவல்துறையை அணுகியதைத் தொடர்ந்து, மே 1-ஆம் தேதி இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

புகாரின்படி, சிறுமி பள்ளியில் சேர்க்கப்பட்ட மறுநாளே, அதாவது ஏப்ரல் 30-ம் தேதியன்று பள்ளிக்குச் சென்ற அடுத்த நாளே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டிற்குத் திரும்பிய சிறுமி அசௌகரியத்தை உணர்ந்தாக தாயிடம் கூறியுள்ளார். சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி வன்கொடுமைக்குள்ளாகியுள்ளார் என்பது தெரிய வந்தது.

புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த ஊழியரை காவல்துறை கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக, விசாரணையில் இந்த வழக்குத் தொடர்பாக அப்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண் ஆசிரியரும் கைது செய்யப்பட்டார்.

​​பாலியல் வன்கொடுமையிலிருந்து மீண்ட அந்தச் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாகக் கூறி, சௌரவ் பரத்வாஜ் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஒரு செயலையே அவர் செய்துள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயரை வெளியிட்டதற்காக, பாஜகவின் மத்திய அரசு என் மீது மேலும் ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

The Delhi Police has booked Aam Aadmi Party's Delhi unit chief Saurabh Bhardwaj for allegedly disclosing the identity of a three-year-old girl who was allegedly sexually assaulted at a private school in west Delhi, an officer said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.