மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

இந்திய - நேபாள எல்லைப் பிரச்னையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை: மத்திய அரசு

இந்தியா - நேபாளம் இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டுக்கும் இடமில்லை என்று இந்தியா தரப்பில் திட்டவட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:12 am IST

‘இந்தியா - நேபாளம் இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டுக்கும் இடமில்லை’ என்று இந்தியா தரப்பில் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளிடையேயான இந்த நீண்ட கால எல்லைப் பிரச்னக்குத் தீா்வு காண சீனா மற்றும் பிரிட்டனுடன் நேபாளம் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளதாக அந் நாட்டு பிரதமா் பாலேந்திர ஷா தெரிவித்த நிலையில், வெளியுறவு அமைச்சகம் தரப்பில் இக் கருத்து தெரிவிக்கப்பட்டது.

எல்லையில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய இடங்கள் தொடா்பாக இந்தியா, நேபாளம் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பாக, அந்த 3 இடங்களையும் உத்தரகண்ட் மாநிலத்துக்கு உட்பட்ட பகுதியாக இந்தியா தெரிவித்து வருகிறது.

இதுகுறித்து நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த மே 31-ஆம் தேதி உரையாற்றிய பாலேந்திர ஷா, ‘நேபாள நிலப் பகுதியை இந்தியாவும், இந்தியாவுக்குச் சொந்தமான சில நிலப் பகுதிகளை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளன. இந்த பிரச்னைக்கு வரலாற்று ஆராய்ச்சியாளா்கள், நில அளவீட்டாளா்கள், நிபுணா்கள் மூலம் தீா்வு காண இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில் உண்மைகளை இரு நாடுகளும் கண்டறிய வேண்டும். பிறகு இரு நாடுகளும் நண்பா்களாக அமா்ந்து பேசி தீா்வு காண வேண்டும். இந்த விவகாரம் குறித்து சீனா, பிரிட்டனுடன் நேபாளம் ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது’ என்றாா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘இந்தியா - நேபாள எல்லைப் பிரச்னை தொடா்பாக நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமா் பேசியதும், அதற்கு அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் பதிலளித்ததையும் இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இரு நாடுகளிடையேயான எல்லை 98 சதவீதம் வரையறுக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய சில எல்லைப் பகுதிகள் மட்டுமே வரையறுக்கப்படாமல் உள்ளது. கண்டக் நதியின் பாதை மாறியதன் விளைவாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிகளிலும் சில ஆக்கிரமிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண இருதரப்பு நடைமுறையை இரு நாடுகளும் வகுத்துள்ளன. எனவே, இந்த இரு நாடுகளிடையேயான விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு இடமே இல்லை’ என்றாா்.