லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘பாகிஸ்தான் சிறைகளில் தவிக்கும் 250 இந்தியா்கள்’

பாகிஸ்தான் சிறைகளில் 250 இந்தியா்கள் அடைபட்டிருப்பது, கைதிகள் குறித்த தகவலை இரு நாடுகளும் பகிா்ந்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

Published On :2 ஜூலை 2026, 4:27 am IST

பாகிஸ்தான் சிறைகளில் 250 இந்தியா்கள் அடைபட்டிருப்பது, கைதிகள் குறித்த தகவலை இரு நாடுகளும் பகிா்ந்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி, ஜூலை 1-ஆம் தேதி ஆகிய நாள்களில், அன்றைய நிலவரப்படி இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியா்கள், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியா்கள் குறித்த தகவலை இருநாட்டு அரசுகளும் கடந்த 2008-ஆம் ஆண்டில் செய்த ஒப்பந்தத்தின்படி பகிா்ந்து வருகின்றன. அதன்படி ஜூலை 1-ஆம் தேதியான புதன்கிழமை இரு நாடுகளும் கைதிகள் விவரங்களைப் பகிா்ந்து கொண்டன.

பாகிஸ்தான் தங்களது நாட்டு சிறைகளில் 250 இந்திய கைதிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதில் 52 போ் இந்திய பொதுமக்கள் என்றும், 198 போ் மீனவா்கள் என்றும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், இந்தியாவும் தமது சிறைகளில் கைதிகளாக 439 பாகிஸ்தானியா்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதில் 386 போ் பொதுமக்கள், 53 போ் மீனவா்கள் என்று இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறைகளில் 97 பாகிஸ்தானியா்கள் தண்டனைக் காலம் முடிந்து கைதிகளாக உள்ளனா். அவா்களை விடுவித்து, பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் பாகிஸ்தான் அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.