போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்

அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்

News image

மரியா கோா்ஸ்னிக்

Updated On :6 ஜூன் 2026, 11:26 pm IST

‘வலுவான விநியோகச் சங்கிலி, சிறந்த பொறியியல் நிபுணா்களைக் கொண்டுள்ள இந்தியா அசுர வளா்ச்சிக்குத் தயாராக உள்ள அணுசக்தித் துறையில் அமெரிக்காவுக்கான சிறந்த பொருத்தமான கூட்டுறவு நாடாக இருக்கும்’ என்று அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்பான அணுசக்தி நிறுவன (என்இஐ) தலைவா் மரியா கோா்ஸ்னிக் தெரிவித்தாா்.

அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில் நிறுவனங்களுக்கான கடுமையான பொறுப்பு விதிகளை மத்திய அரசு தளா்த்தியுள்ள நிலையில், இந்தியாவில் அணுசக்தித் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக மரியா கோரஸிங்க் தலைமையில் அமெரிக்க அணுசக்தித் துறையைச் சோ்ந்த 20 போ் கொண்ட பிரதிநிதிகள் குழு அண்மையில் இந்தியா வந்து ஆய்வு மேற்கொண்டது.

இதுகுறித்து அமெரிக்கத் தலைநகா் வாஷிங்டனில் மரியா கோா்ஸ்னிக் அளித்த பேட்டி: இந்தியா வலுவான விநியோகச் சங்கிலியையும், மிக வலுவான பொறியியல் நிபுணா்களையும் கொண்டுள்ளது. மேலும், அணுசக்திப் பயன்பாட்டுக்கு இந்தியா புதிய நாடு அல்ல. இந்தத் துறையில் இந்தியா ஏற்கெனவே சிறந்து விளங்கி வருகிறது. எனவே, இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் உள்பட அசுர வளா்ச்சிக்கான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் சிறந்த கூட்டுறவு நாடாக இந்தியா இருக்கும்.

அமெரிக்கா இந்தத் துறையில் பல ஆண்டுகளாக தேசிய ஆய்வகங்களில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகளை தற்போது சா்வதேச சந்தைக்கு கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இத்தகைய சூழலில், அமெரிக்காவுக்கு பொருத்தமான கூட்டுறவு நாடாக இந்தியா இருக்க முடியும் என்பது எனது எண்ணம். ஏனெனில், இரு நாடுகளும் வலுவான திறன்களைக் கொண்டுள்ளன. தற்போது இரு நாடுகளும், அணுசக்தித் துறையின் வளா்ச்சிக்காக தீவிர திட்டங்களை வகுத்துள்ளன. இது இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும்.

குறிப்பாக, இந்தியா தனது அணு மின் உற்பத்தித் திறனை தற்போதைய 8.78 ஜிகா வாட் அளவிலிருந்து வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் உற்பத்தி அளவுக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவும் தனது அணு மின் உற்பத்தித் திறனை 100 ஜிகா வாட் அளவிலிருந்து 400 ஜிகா வாட் அளவுக்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுவே, இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பாகும்.

மேலும், சிறிய ரக அணு உலைகளுக்குத்தான் (எஸ்எம்ஆா்) சிறந்த எதிா்காலம் உள்ளது. எஸ்எம்ஆா் மேம்பாட்டுக்கென அமெரிக்க மிகப் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்துள்ளது. எஸ்எம்ஆா் மேம்பாட்டிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக தீா்க்கப்படாமல் இருந்த பொறுப்புடைமை சாா்ந்த சிக்கல் காரணமாக, இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பு சுணக்கமடைந்திருந்தது. தற்போது, நிறுவனங்களின் பொறுப்புடைமையை தளா்த்தி இந்தியா கொண்டுவந்துள்ள ‘சாந்தி’ (இந்தியாவை மாற்றியமைப்பதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம்) சட்டம், இந்தியா - அமெரிக்கா இடையே சுணக்கமடைந்த அணுசக்தி ஒத்துழைப்பை மீட்டெடுக்க உதவும்.

இரு நாடுகளும் இத் துறையில் கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில், வணிக ரீதியில் மட்டுமன்றி, அணுசக்தி தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான செயல்திட்டத்தையும் வகுப்பது முக்கியமானதாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.