நாட்டில் 1951 முதல் 1990-கள் வரை நடைபெற்ற மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. வாக்குச் சீட்டு அச்சிடல், அவை எண்ணப்பட்டு வெற்றி அறிவிப்பில் தாமதம், வழக்கு ஏற்பட்டால் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு... இவை யாவும் பெரும் சிக்கலாக இருந்துவந்தன.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 1982-இல் கேரளத்தின் பரவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் சோதனை செய்யப்பட்டன. பின்னர் பலகட்ட சட்டச் சிக்கலுக்குப் பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பினாலும், தேர்தல் ஆணையம் பின்வாங்காமல் அதன் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நம்பிக்கையை மக்கள், தேர்தல் பணி அலுவலர்கள், சர்வதேச நாடுகளில் ஏற்படுத்த தில்லி துவாரகாவில் உருவாக்கப்பட்டதுதான் 'இந்திய சர்வதேச ஜனநாயகம் & தேர்தல் மேலாண்மை நிறுவனம்' (ஐ.ஐ.ஐ.டி.இ.எம்.) ஆகும். இந்த நிறுவனம் நிகழாண்டு 15-ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறது.
140 நாடுகளைச் சேர்ந்தோருக்குப் பயிற்சி ஜனநாயகத்தின் தாய்நாடான இந்தியா தேர்தல் நடைமுறைகள் குறித்து உலக நாடுகளுக்குப் பயிற்சியளித்து வருகிறது. இதுவரையில் 140-க்கும் மேற்பட்ட நாடுகளின் தேர்தல் அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்து, ஜனநாயகம் தழைக்க உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது இந்தியா.
தேர்தல்களை வெளிப்படையாகவும், நேர்மையாகவும், எளிமையாகவும் நடத்தும் வகையில் ஆராய்ச்சி, பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதலில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த ஐ.ஐ.ஐ.டி.இ.எம். மையத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக 28-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்த மையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இங்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பயிற்சி பெற்றுள்ளனர். 141 நாடுகளில் ஐ.ஐ.டி.இ.எம். தடம் பதித்து பயிற்சியளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் 46 நாடுகளும், ஆசியாவில் 41 நாடுகளும், வட & மத்திய அமெரிக்காவில் 18 நாடுகளும், ஐரோப்பாவில் 15 நாடுகளும், தென் அமெரிக்காவில் 12 நாடுகளும், பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 9 நாடுகளும் இவற்றில் அடங்கும்.

11 கோடி பேர் பயன்படுத்தும் 'இசிஐநெட்' செயலி தேர்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து நேரடிப் பயிற்சி அளிக்கும் வகையில், தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எப்படிப் பதிவாகின்றன, வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன் அரசியல் கட்சியின் முகவர்களுக்கு இயந்திரங்களில் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குகளை மாதிரி வாக்குப்பதிவு செய்து, சோதனை செய்வது உள்ளிட்டவை குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்படுகிறது. வாக்குகள் பதிவானவுடன், எப்படிப் பாதுகாப்பாக வாக்குச் சேமிப்புப் பெட்டிகள் வைக்கப்படுவதையும், அவை எண்ணப்படுவதையும் குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்படுகிறது.
இந்தச் செயல்முறை விளக்கம் குறித்து நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் முந்நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பங்கேற்றார்.
'உலகிலேயே அதிகமாக இந்தியாவில் 95 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் 8 கோடி வாக்காளர்கள் கூடுதலாகின்றனர். தகுதியானவர்களைச் சேர்க்கவும், உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களை நீக்கவும் நாடு முழுவதும் சுமார் 27 லட்சம் ஊழியர்கள் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் எக்ஸ் தளத்தை சுமார் 2.5 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், நீக்கவும் உதவும் தேர்தல் ஆணையத்தின் நவீன 'இசிஐநெட்' செயலியை 11 கோடிக்கு அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்'' என்று தேர்தல் ஆணைய அலுவலர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பு கிடங்கில் ஆய்வு

பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி

இந்தியாவின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாங்கும் இந்தோனேசியா

இந்திய - நேபாள எல்லைப் பிரச்னையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை: மத்திய அரசு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



