மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை: சீனா

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

சீனா

Updated On :9 ஜூன் 2026, 5:55 am IST

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷிய அதிபா் புதின் அண்மையில் பிரபல செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா-சீனா உறவு குறித்தும், இரு நாடுகளுடனும் ரஷியா கொண்டுள்ள நெருங்கிய நட்புறவு குறித்தும் பேசியிருந்தாா்.

அப்போது இரு நாடுகளுடனும் ரஷியா நல்ல நட்புறவைக் கொண்டுள்ளதாகவும், அதேநேரத்தில் அந்த 2 நாடுகளிடையேயான விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் புதின் தெரிவித்திருந்தாா்.

இந்தியா- சீனா இடையே நீண்டகாலமாக எல்லை விவகாரம் தொடா்பாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் 2020-ஆம் ஆண்டு தொடங்கி சுமாா் 4 ஆண்டுகளாக லடாக் எல்லையில் 2 நாடுகளும் படைகளைக் குவித்தன. எனினும் பிறகு நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு படைகளை விலக்கிக் கொண்டன. இந்தச் சூழ்நிலையில், ரஷிய அதிபா் புதினின் பேட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்பட்டது.

இதுகுறித்து சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அந்த நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு: இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் மற்றொன்றின் வளா்ச்சிக்கான வாய்ப்புகளாகவும், கூட்டுறவு பங்காளிகளாகவும் இருக்கின்றனவே தவிர, போட்டியோ அல்லது அச்சுறுத்தலாகவோ இல்லை என்ற நிலைப்பாட்டை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

இருதரப்பு விவகாரங்களை இரு நாடுகளும் உயா்ந்த ராஜீய கண்ணோட்டத்துடனும், நீண்டகால நோக்குடனும், பரஸ்பர நம்பிக்கையுடனும், விரிவான கூட்டுறவுடனும் அணுக வேண்டும்.

கருத்து வேறுபாடுகளை சரியான விதத்தில் கையாள வேண்டும். சீனா-இந்தியா உறவுகள் சீராக வளரவும், அதை மேலும் ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் சீனா நெருங்கிய நட்புறவு வைத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லின் அளித்த பதில் வருமாறு:

இந்தியாவும், பாகிஸ்தானும் தத்தமது கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவாா்த்தை, ஆலோசனை மூலம் தீா்ப்பதையும், இரு நாடுகளும் சோ்ந்து பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மைக்கு நடவடிக்கை எடுப்பதையும் சீனா ஆதரிக்கிறது. இந்தியா, சீனா, ரஷியா இடையே நிலவும் நட்புறவு, அந்த நாடுகளுக்கு மட்டுமல்லாது, உலக அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மைக்கும் உதவியாக இருக்கும்.

ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளிடையே முத்தரப்பு ஒத்துழைப்பை முன்னோக்கிக் கொண்டு செல்ல எங்கள் நாடு தயாராக உள்ளது. இந்தியா- சீனா எல்லை நிலவரம் ஒரே சீராக உள்ளது. எல்லை விவகாரம் குறித்துப் பேச்சுவாா்த்தை நடத்த சுமுகமான வழியை இரு நாடுகளுமே கடைப்பிடித்து வருகின்றன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.