முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மகிழ்ச்சியான செய்தி! தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

மகிழ்ச்சியான செய்தியாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக அறிவிப்பு.

News image

தென்மேற்குப் பருவமழை - IMD

Updated On :4 ஜூன் 2026, 11:51 am IST

கொடூர வெய்யிலில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் தென்மேற்குப் பருவமழையே முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

அந்த வகையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவுகள், கேரளத்தின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நாட்டின் விவசாயமும் பெரும்பகுதி அளவுக்கு தென்மேற்குப் பருவமழையை நம்பியிருக்கின்றன.

ஒரு மாநிலத்தில் மழை பெய்தாலும், ஆறுகள் வழியாக அண்டை மாநிலங்களும் பயன்பெறும் என்பதால், கேரளத்தில் மழை தொடங்கினால் அதன் காரணமாக தமிழகமும் பயன்பெறும்.

ஆனால்... இந்த ஆண்டு

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் (ஜூன்-செப்டம்பா்) பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேலும், நீண்ட கால சராசரி மழைப்பொழிவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது பற்றாக்குறையாக கருதப்படும். எல்நினோ விளைவு ஜூன் மாதம் வலுவிழந்து செப்டம்பரில் மீண்டும் வலுவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


ஜூனில் அதிக வெப்ப அலை இருக்கலாம்

ஜூன் மாதத்தில் உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், பிகாா், ஒடிஸா, சத்தீஸ்கா், குஜராத், ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்றாா்.

சராசரி மழைப்பொழிவு


நீண்டகால சராசரி மழைப்பொழிவு என்பது குறிப்பிட்ட பகுதியில் மாதம் அல்லது பருவகாலம் என ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரையில்) பதிவாகும் சராசரி மழைப்பொழிவாகும். இந்தியாவில் 1971 முதல் 2020 வரையிலான நீண்ட கால சராசரி மழைப்பொழிவு 87 சதவீதமாக பதிவாகியுள்ளது.

Summary

The good news is that the southwest monsoon has begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.