சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஜேஇஇ தரவுகள் கசிவு! கல்வி அமைச்சர் திறமையற்றவர்! கரப்பான்பூச்சி கட்சி

ஐஐடி நடத்திய ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியான சில நாள்களில், தரவுகள் கசிந்த விவகாரம் குறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தெரிவித்த கருத்து.

News image

மத்திய கல்வி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்திய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி. - படம் - எக்ஸ், ஏஎன்ஐ

Updated On :4 ஜூன் 2026, 9:51 pm IST

ஐஐடி நடத்திய ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியான சில நாள்களில், தரவுகள் கசிந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு,மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறமையற்றவர் என்றும் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியில் திருத்தியதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஐஐடி நடத்திய ஜேஇஇ இரண்டாம் நிலைத் தேர்வெழுதிய ஏறக்குறைய 1.79 இலட்சம் மாணவர்களின் தரவுகள் இணையத்தில் பாதுகாப்பற்ற முறையில் கசிந்தன.

இது குறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா பேசியதாவது:

சுமார் இரண்டு லட்சம் மாணவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை வழிநடத்தும் வல்லுநர்களை உருவாக்கிய ஒரு நாட்டில், கல்வி அமைச்சரும் அரசும் அடிப்படை அமைப்புகளைப் பாதுகாப்பாக முடியாத அளவுக்குத் திறமையற்றவர்களாக உள்ளனர்.

கல்வி அமைச்சர் முற்றிலும் திறமையற்றவர். அவர் கல்வி முறையைச் சீரழித்துவிட்டார். தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமரிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இது நமது மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம்.

ஒரு சாதாரண ஐஐடி இணையதளத்தைப் பாதுகாப்பாக முடியாது. 16, 17 மற்றும் 18 வயது இளைஞர்கள் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கின்றனர் என்று தெரிவித்தார்

Summary

A few days after the release of the results for the JEE examination conducted by the IITs, the CJP has demanded the resignation of Union Education Minister Dharmendra Pradhan, citing the data leak controversy and labeling him as incompetent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.