லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ராணுவ வீரர்களுக்காக... அட்டாரி - வாகா எல்லையில் பாடிய ஏ.ஆர். ரஹ்மான்!

அட்டாரி - வாகா எல்லையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தியது குறித்து...

AR Rahman perform at the Attari-Wagah border

அட்டாரி - வாகா எல்லையில் இசைக் குழுவினருடன் ஏ.ஆர். ரஹ்மான் - பிடிஐ

Published On :

அட்டாரி - வாகா எல்லையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தினார்.

இதில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இணைந்து பாடல் பாடினார்.

பாடகர் மோஹித் செளஹான், இயக்குநர் இம்தியாஸ் அலி, நடிகர் வேதாங் ரெய்னா தொழிலதிபரும் நடிகையுமான அனன்யா பிர்லா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள மெய்ன் வாபஸ் ஆவுங்கா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக படக்குழு இந்த இசைக்கச்சேரியை நடத்தியுள்ளது.

ராணுவ பின்னணியை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அட்டாரி - வாகா எல்லையில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

ஜெய் ஹோ - ஏ ட்ரிபுட் டூ பிரேவ்ஹார்ட்ஸ் என்ற தலைப்பில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், ஆஸ்கர் விருது வென்ற ஜெய் ஜோ என்ற பாடலை ஏர்.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் சேர்ந்து பாடினார்.

அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சியும் இடம்பெற்றது.

Summary

AR Rahman perform at the Attari-Wagah border in Punjab with singer Mohit Chauhan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.