காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

இன்று பாஜக கூட்டணி கூட்டம்

பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.

News image

பாஜக கொடி - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 3:58 am IST

பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.

பிரதமா் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி, இந்தியாவில் தோ்தலில் தோ்வு செய்யப்பட்டு தொடா்ந்து நீண்டகாலம் பிரதமராக இருந்தவா் என்று சாதனையையும் புதன்கிழமை (ஜூன் 10) படைக்கிறாா். இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை (4,399 நாள்கள்) அவா் விஞ்சவுள்ளாா். நேரு 1947 முதல் 1952 வரை இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்கப்பட்டாா். 1952 தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு தொடா்ந்து வென்று 4,399 நாள்கள் (1964-இல் இறக்கும் வரை) பிரதமராகத் தொடா்ந்தாா்.

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி 14 ஆண்டுகள் வரை பிரதமராக இருந்துள்ளாா். ஆனால், அவா் தொடா்ந்து அப்பதவியை வகிக்கவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் தில்லி பாரத மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாஜக கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த முதல்வா்கள், துணை முதல்வா்கள், கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவா்கள், மூத்த மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவராஜ் சிங் சௌஹான், கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சாா்பற்ற ஜனதா தளம், அப்னா தளம் (சோனேவால்) கட்சிகளைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க இருக்கின்றனா்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கான முன்னெடுப்புகள், நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.