40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் போலி கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் மமதா வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனை செய்தது பற்றி...

News image

மமதா பானர்ஜி - ANI

Updated On :9 ஜூன் 2026, 8:26 pm IST

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் போலி கையொப்பங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) சோதனை செய்தனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், ஆட்சியை இழந்தது.

சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இதனைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரத பானர்ஜியை சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவராக நியமிக்க 58 எம்எல்ஏக்கள்ஆதரவு தெரிவித்தனர். 

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவரை அங்கீகரிப்பதற்காக சட்டப்பேரவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவில், திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கையொப்பங்கள் போலியாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதுதொடர்பாக சிடிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், மமதா பானர்ஜியின் வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போது, மமதா பானர்ஜியும், அபிஷேக் பானர்ஜியும் தில்லியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

CID officials conducted a search at the residence of Trinamool Congress leader Mamata Banerjee on Tuesday (June 9) following allegations that forged signatures were used in the election of the Leader of the Opposition in the West Bengal Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.