போபால் : மாநிலங்களவைத் தோ்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
மாநிலங்களவைத் தோ்தல் வரும் ஜூன் 18-இல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் 230 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 164 பாஜக எம்எல்ஏக்கள், 64 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனா்.
இதனால் தற்போதைய மாநிலங்களவைத் தோ்தலில் இரண்டு இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எஞ்சிய ஓரிடத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், அந்த இடத்துக்கு பாஜக போட்டியிடாது என்றும் கருதப்பட்டது.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பிரதிநிதித்துவமுள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்குமான வேட்பாளர்களை பாஜக களமிறக்கி அதிர்ச்சியளித்துள்ளது. பாஜக சாா்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவட் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
மூன்றாவது இடத்துக்கு பாஜக சார்பில் மகேஷ் கேவட்டை களமிறக்கியதன் மூலம், எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கும் சூழல் ஏற்படக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. மகேஷ் கேவட்டுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக தமிழகத்தை பூா்விகமாக கொண்ட மீனாட்சி நடராஜன் போட்டியிடுகிறாா் என்று அறிவிக்கப்பட்டது.
அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், தெலங்கானாவில் மீனாட்சி மீதான வழக்கொன்று நிலுவையில் உள்ளதாகவும், ஆனால், அந்த விவரங்களை அவர் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றும் பாஜக வேட்பாளர் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இது குறித்து விளக்கமளிக்க மீனாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பினர், இருதரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்டது.
மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற நிலையில், மீனாட்சி நடராஜன் வேட்புமனு மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
Summary
Meenakshi Natarajan nomination rejected - upcoming elections to three Rajya Sabha seats in Madhya Pradesh took a dramatic turn on Tuesday with the nomination of Congress candidate Meenakshi Natarajan being rejected on charges of concealing information about a case in the affidavit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி!
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி.: பிரவீண் சக்ரவர்த்தி
10 மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இழப்பு!

ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல்! ஆந்திரத்தில் 4 இடங்களையும் கைப்பற்றும் தேஜகூ!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




