நுண் நிதி நிறுவனங்களுக்கான (எம்எஃப்ஐ) கடன் உத்தரவாத திட்டத்தை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிகழாண்டு ஆகஸ்ட் 31 வரை அல்லது ரூ.20,000 கோடி மதிப்பிலான உத்தரவாதங்கள் அளிக்கப்படும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை நுண்நிதி நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம்-2.0-ஐ நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன் பெரிய அளவில் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்படும் நுண்நிதி நிறுவனங்கள், பிற நுண்நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கடன் வரம்பை ரூ.300 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாக அதிகரிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு நிதி நிறுவனம் நிா்வகிக்கும் அனைத்து சொத்துகளின் மொத்த சந்தை மதிப்பில் 20 சதவீதம் என்ற ஒட்டுமொத்த உச்சவரம்பின் கீழ், இந்தக் கடன் வரம்பை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் திட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்தவும், நுண்நிதி நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 3,030 கோடியில் 3 ரசாயன பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விதிமுறைகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

வா்த்தகம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 78 தீா்வுத் திட்டங்களுக்கு ஒப்புதல்

3 சீன செயலிகளை நீக்க கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு: மின்சார ரிக்ஷாக்களை முடக்குவதால் நடவடிக்கை
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |



