இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

மக்கள்தொகை மாற்றம்: எல்லைப் பகுதிகளில் நேரில் ஆய்வு - உயா்நிலை குழுவுக்கு அமித் ஷா உத்தரவு

மக்கள்தொகை மாற்றம்: எல்லைப் பகுதிகளில் நேரில் ஆய்வு - உயா்நிலை குழுவுக்கு அமித் ஷா உத்தரவு

News image

அசாதாரண மக்கள்தொகை மாற்றம் குறித்து புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :14 ஜூன் 2026, 3:33 am IST

சட்டவிரோத குடியேற்றம், பிற இயற்கைக்கு மாறான காரணங்களால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து எல்லைப் பகுதிகள், பெரு நகரங்கள், தொழில் நகரங்களில் நேரில் ஆய்வு செய்யும்படி, உயா்நிலைக் குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

நாட்டில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த மாதம் அமைத்தது.

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகா் நெளலேகா் தலைமையிலான இந்த உயா்நிலைக் குழுவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்சய்குமாா் நாராயண், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி துா்காசங்கா் மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவாஸ்தவா, மருத்துவா் ஷாமிகா ரவி ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து, அதற்கு தீா்வுகாணும் பரிந்துரைகளை உயா்நிலைக் குழு வழங்கும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்திருந்தாா்.

இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், தில்லியில் அமித் ஷா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, எல்லை மாவட்டங்கள், பெரு நகரங்கள், தொழில் நகரங்களில் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளும்படி, உயா்நிலைக் குழுவுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தனது பணி வரையறைகளின்படி, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து உயா்நிலைக் குழு அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொண்டு, காரணங்களைக் கண்டறியவுள்ளது. இந்த மாற்றங்களை சரி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய கொள்கை சாா்ந்த, சட்டபூா்வமான, நிா்வாக ரீதியிலான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கவுள்ளது.

எல்லைத் தாண்டிய ஊடுருவல்கள், அதன் காரணமாக பொருளாதாரம்-சமூக சூழல்களில் ஏற்படும் தாக்கம் குறித்தும் ஆராயப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.