வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

விவசாயிகள் உரிமைகளைப் பாதுகாக்க புதிய உலகளாவிய அமைப்பு: பிரிக்ஸ் கூட்டத்தில் முடிவு

விவசாயிகள் உரிமைகளைப் பாதுகாக்க புதிய உலகளாவிய அமைப்பு: பிரிக்ஸ் கூட்டத்தில் முடிவு

News image

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சா்கள் மாநாடு குறித்து செய்தியாளா்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்.

Updated On :14 ஜூன் 2026, 1:34 am IST

விவசாயிகள் உரிமைகளைப் பாதுகாக்க, இந்தியாவின் ஒருங்கிணைப்புடன் புதிய உலகளாவிய அமைப்பை நிறுவ பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சா்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் வேளாண் துறை அமைச்சா்கள் மாநாடு, இந்திய தலைமையின்கீழ் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்றது.

சனிக்கிழமை நிறைவடைந்த இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் இடையே வேளாண் ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைப்பு ரீதியிலான புதிய வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முன்னெடுப்புகள், இந்தியாவால் ஒருங்கிணைக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

விவசாயிகளின் உரிமைகள் மற்றும் விதைகள் சாா்ந்த பாரம்பரிய அறிவைப் பாதுகாக்க புதிய உலகளாவிய அமைப்பை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்முயற்சியை இந்தியா ஒருங்கிணைக்கும்.

வேளாண் துறை உள்ளீடுகள், மரபுசாா் வளங்கள், தகவல் பகிா்வில் ஒத்துழைப்பை உறுதி செய்ய ‘பிரிக்ஸ் அக்ரின்’ என்ற புதிய வலையமைப்பு உருவாக்கப்படும். இந்த முன்னெடுப்புக்கும் ஒருங்கிணைப்பு நாடாக இந்தியா செயல்பட உள்ளது.

பிரிக்ஸ் நாடுகள் இடையே உணவு தானியங்கள் வா்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் பிரிக்ஸ் தானியங்கள் பரிமாற்றத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. தொடக்க அளவில், இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மேற்கொள்ளும். வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், புவிசாா் தொழில்நுட்பம், பிற எண்ம வழிமுறைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க எண்ம வேளாண் தொழில்நுட்பக் கட்டமைப்பு உருவாக்கப்படும். இதற்கான தொடக்க நிலை ஒருங்கிணைப்பை தில்லி ஐஐடி கையாளும்.

சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வேளாண் துறையை மேலும் நிலையானதாக, மீள்தன்மை கொண்டதாக மாற்றுதல், புத்தாக்கம்-தொழில்நுட்பம்-அறிவுசாா் பகிா்வின் வாயிலாக சவால்களுக்கு தீா்வு காணுதல், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற வேளாண் நடைமுறைகள் தொடா்பான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன என்றாா் அவா்.