மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் நலன் குறித்து விவாதிக்கப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் இக்கூட்டத்தில், ஜூன் 9 முதல் மூன்று நாள்கள் விவசாயப் பணிக்குழு கூட்டமும், ஜூன் 12 முதல் இரண்டு நாள்கள் பிரிக்ஸ் அமைச்சர்கள் அளவிலான கூட்டமும் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் கூட்டத்தில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய பதினொரு நாடுகள் பங்கேற்கும்.
இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சிவராஜ் சிங் சௌஹான், உலகின் வளரும் நாடுகளின் மிக வலுவான குரலாக பிரிக்ஸ் திகழ்கிறது.
உலகின் மக்கள் தொகையில் சுமார் பாதி பேர் பிரிக்ஸ் நாடுகளில் வசிக்கின்றனர். உலகளாவிய விவசாய நிலப்பரப்பில் 42 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அளிக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள 58 கோடி விவசாயிகளில், 70 சதவீத சிறு விவசாயிகள் பிரிக்ஸ் நாடுகளிலேயே வசிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் முக்கியமாக உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், ஊட்டச்சத்து, பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய நவீன விவசாயம், சர்வதேச விவசாய வர்த்தகத்தை எளிதாக்குதல், விநியோகச் சங்கிலிகள், டிஜிட்டல் விவசாயம், ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியா இதற்கு முன்பு 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் உலகளாவிய விவசாயத் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக அமையும் என கடந்த மாதம் இந்தூரில் செய்தியாளர்களிடம் சௌஹான் கூறியிருந்தார்.
2026-ஆம் ஆண்டை 'வேளாண் நல ஆண்டு' என அறிவித்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் நிதித் தலைநகரான இந்தூரில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது முக்கியத்துவம் பெறுகிறது.
Union Agriculture Minister Shivraj Singh Chouhan stated that the welfare of farmers would be discussed during the five-day BRICS meeting being held in Indore, Madhya Pradesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரம் நடுவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: அமைச்சா் சிவராஜ் சிங் அழைப்பு!

பருவமழை தீவிரமடைவதால் சாகுபடி பரப்பு அதிகரிக்கும்: மத்திய அமைச்சா் சௌஹான் நம்பிக்கை

12 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 71 % அதிகரிப்பு- மத்திய அமைச்சா் தகவல்

எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




