ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படம் ஓடிடி வெளியீட்டிற்குப் பின் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் காதல் திரைப்படமாக உருவான 29 திரைப்படம், மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
கதாநாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற சான் ரோல்டனின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. ஆனால், திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
தற்போது, இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான பின் பலரும் பாராட்டி வருகின்றனர். 10 பகுதிகளாக பிரிக்கப்பட்ட இப்படம் 29 வயதான இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்துடன் காதலும் இணையும் போது பலரது வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ள முடிவதாகவும் வசதியான குடும்பப் பின்னணியில் இல்லாமல் தனக்கான அடையாளத்தை அடையும் முனைப்பு என பல காட்சிகளை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
முக்கியமாக, முழுமையாக படம் சிறப்பான அனுபவமாக மாறவில்லை என்றாலும் கதைக்கான காட்சிகளும் அதன் வசன தருணங்களும் சிறப்பாக இருந்ததாக பதிவிட்டு வருகின்றனர். இதனைக் கண்ட இயக்குநர் ரத்னகுமார், 29 கொண்டாடப்படுவதை உணர முடிகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
The film 29, directed by Rathnakumar, has been generating a lot of buzz following its OTT release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










