நடிகர் நஸ்லன் நடிப்பில் உருவான மாலிவுட் டைம்ஸ் திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் கவனம் பெற்று வருகிறது.
பிரேமலு திரைப்படம் மூலம் பெருமளவில் கவனமும், மொழிகளைக் கடந்த ரசிகர்களையும் பெற்றவர் நடிகர் நஸ்லன். அவர் நடித்து வெளியான, “ஆலப்புழை ஜிம்கானா” படமும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அபினவ் சுந்தர் இயக்கத்தில் நஸ்லன் நாயகனாக நடித்து வெளியான புதிய படம் “மாலிவுட் டைம்ஸ்”. சினிமா மீது ஆர்வம் கொண்ட இளைஞனின் ஹாரர் படம் எடுக்கும் முயற்சியைக் கதைகளமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது, ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. சினிமா மட்டுமல்லாது லட்சியம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும் சிலர் பரிந்துரை செய்து வருகின்றனர்.
மலையாள சினிமாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக நடிகர் நஸ்லன் வளர்ந்து வருவதால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The Mollywood film starring actor Naslen is gaining attention following its OTT release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










