நடிகைகள் ரேவதி, பத்மப்ரியா ஆகியோர் அம்மா சங்கத்திலிருந்து விலகினர்.
மலையாளத் திரைத்துறையின் நடிகர் சங்கமான அம்மா கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சையிலும் குழப்பத்திலுமே இருக்கிறது. காரணம், நடிகர் மோகன்லால் இச்சங்கத்தின் தலைவராக இருந்த போது பல நடிகர்களின் மீது சில நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
மீ டு (me too) அலை அதிகமாக இருந்த நேரம் என்பதால் சங்கத்தில் பொறுப்பிலிருந்த செயலாளரும் நடிகருமான சித்திக், ஜெயசூர்யா, எடவேல பாபு உள்ளிட்ட பெயர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் அடிபட்ட போது அம்மா சங்கம் மௌனத்தையே கடைபிடித்தது.
முக்கியமாக, பாதிக்கப்பட்ட நடிகைகளுக்காக ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு வாக்குமூலங்களும் ஆதாரங்களும் பெறப்பட்டன. ஆனால், அதன் மூலமும் பெரிதாக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து, மோகன்லால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். அதன்பின், நடிகை ஷ்வேதா மேனன் அம்மா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், அவரும் ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், அம்மா அமைப்பிலிருந்த நடிகைகள் ரேவதி, பத்மப்ரியா ஆகியோர் நடிகர் சங்கத்திலிருந்து விலகியுள்ளனர். இதற்காக, இருவரும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், “ஹேமா கமிட்டிக்கு பின் அம்மா அமைப்பில் ஏதாவது மாறும் என நினைத்தோம். ஆனால், சில ராஜிநாமாக்கள் நிகழ்ந்ததைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. இன்னும் இது ஆண்களின் ஆதிக்க அமைப்பாகத்தான் இருக்கிறது. நாங்கள் இதிலிருந்து வெளியேறுவது தோல்வியல்ல. எங்களின் சுயமரியாதையைக் காக்கும் பொருட்டே விலகுகிறோம். அதேநேரம், சமத்துவமான மலையாளத் திரைத்துறை உருவாக்குவதற்கான எங்களின் பயணமும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பால் சில ஊகங்களும் எழுந்துள்ளன. முக்கியமாக, ராஜிநாமா செய்த முன்னாள் நிர்வாகிகளின் தலையீடும், பெண்களுக்கு எதிராகத் தொடரும் அத்துமீறல்களுமே இவர்கள் நடிகர் சங்கத்திலிருந்து விலகியத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.
முன்னணி நடிகைகளான ரேவதியும் பத்மப்ரியாவும் நடிகர் சங்கத்திலிருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actresses Revathi and Padmapriya resigned from the 'Amma' association.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த அணிகள்!

புள்ளிகள்

மகாபாரதம் தொடரில் நடித்தவர்களின் மேடை நாடக அரங்கேற்றம்! குவியும் ரசிகர்கள்!

அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



