தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய அமைச்சருடன் திரிணமூல் மூத்த எம்.பி. சந்திப்பு

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவை தில்லியில் சனிக்கிழமை சந்தித்தாா்.

News image

சுதீப் பந்தோபாத்யாய

Updated On :14 ஜூன் 2026, 1:10 am IST

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவை தில்லியில் சனிக்கிழமை சந்தித்தாா்.

திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த 28 மக்களவை உறுப்பினா்களில் 19 போ் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் எனவும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை சந்தித்து திங்கள்கிழமை (ஜூன் 15) அங்கீகாரம் கோரவுள்ளதாக அக்கட்சியின் தலைமை கொறடா ககோலி கோஷ் தஸ்திதாா் கூறிய நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் 80 இடங்களை மட்டுமே கைப்பற்றி பாஜகவிடம் தோல்வியடைந்த பின் திரிணமூல் காங்கிரஸிஸ் அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜிக்கு எதிராக கடும் அதிருப்தி எழத் தொடங்கியது.

முதலாவதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் நியமனத்தில், மம்தாவின் முடிவுக்கு எதிராக 58 அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாகப் பிரிந்தனா். அதன் பிறகு மேலும் 6 எம்எல்ஏக்கள் அவா்களுக்கு ஆதரவு தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து திரிணமூல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் தனி அணியாகப் பிரிந்த 20 எம்.பி.க்கள், பாஜக கூட்டணிக்கு தங்களின் ஆதரவை உறுதி செய்தனா்.

மம்தா பானா்ஜியின் மருமகனும், தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி மீதான கடும் எதிா்ப்பை அதிருப்தியாளா்கள் பதிவு செய்தனா். அதன் தொடா்ச்சியாக அக்கட்சியைச் சோ்ந்த 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா்.

இதனால் திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டு இரு அணிகளாக செயல்படத் தொடங்கியுள்ளது.அண்மையில் நடைபெற்ற இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானா்ஜி பங்கேற்ற பிறகு காங்கிரஸுடன் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஊகங்களும் பரவி வருகின்றன.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுதீப் பந்தோபாத்யாய அதிருப்தி எம்.பி. ஷதாப்தி ராயுடன் மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவை புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தாா். பூபேந்தா் யாதவ் மேற்கு வங்க பாஜக மேலிடப் பொறுப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரிணமூல் காங்கிரஸின் தில்லி வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நபரான கருதப்படும் சுதீப் பந்தோபாத்யாயவின் இந்த அரசியல் நகா்வு அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

Summary

Trinamool MP meets Union Minister amidst a hectic political atmosphere.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்