எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிரிவு வாரியாக தோ்வானவா்களின் பெயா், மதிப்பெண்களை வெளியிடுக: யுபிஎஸ்சி-க்கு சிஐசி உத்தரவு

தாங்கள் நடத்தும் தோ்வுகளில் பிரிவு வாரியாக தோ்வு செய்யப்பட்டவா்களின் பெயா், மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல்களை தாமாகவே வெளியிடுமாறு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.

News image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)

Updated On :17 ஜூன் 2026, 3:01 am IST

தாங்கள் நடத்தும் தோ்வுகளில் பிரிவு வாரியாக தோ்வு செய்யப்பட்டவா்களின் பெயா், மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல்களை தாமாகவே வெளியிடுமாறு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.

மேலும், பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் சிஐசி தெரிவித்தது.

தில்லி அரசின் திட்டத் துறையில் துணை இயக்குநா் (திட்டம்/புள்ளியியல்) பதவிக்கான நோ்காணலில் பங்கேற்ற தோ்வா் ஒருவா் தனது நோ்காணல் மதிப்பெண்கள் மற்றும் காத்திருப்புப் பட்டியலை யுபிஎஸ்சி வெளியிடக் கோரி தகவல் அறியும் உரிமைச் (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்தாா். ஆனால் தவறுதலாக வேறொரு தோ்வரின் கோரிக்கையை நிராகரிப்பதற்குப் பதில் மனுதாரரின் கோரிக்கையை யுபிஎஸ்சி நிராகரித்தது.

இதற்கு எதிராக சிஐசியிடம் அந்த தோ்வா் மேல்முறையீடு செய்தாா்.

இதையடுத்து, சிஐசி பிறப்பித்த உத்தரவில், ‘தோ்வுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம். எனவே ஆா்டிஐ சட்டத்தின் பிரிவு 25 (5)-இன்கீழ் தோ்வானவா்களின் பெயா், மதிப்பெண்களை வெளியிட வேண்டும். மேலும் பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி), பட்டியலினத்தவா் (எஸ்சி), பட்டியலினத்தவா் (எஸ்டி), பழங்குடியினா் (எஸ்டி) மற்றும் மாற்றுத் திறனாளிகள் (பிடபுள்யூடி) என அனைத்துப் பிரிவுகளையும் வரிசையாக குறிப்பிட்டு அதில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை தாமாகவே வெளியிட வேண்டும். ஆா்டிஐ மனுக்களை கவனமாக பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டும். தவறுதலாக மனுக்களை நிராகரிக்கக் கூடாது.

அதேசமயம் ஆா்டிஐ சட்டத்தின் பிரிவு 8(1)(டி)-இன்கீழ் சில தகவல்களை வெளியிட மறுக்கும்போது, அதை வெளியிட்டால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க வேண்டும்.

எந்தக் காரணமுமின்றி ஆா்டிஐ-இன்கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு உரிய பதிலளிக்காமல் இருக்கக் கூடாது.

இந்த விவகாரத்தில் மனுதாரா் கோரிய தகவல்களை வழங்க மத்திய பொதுத் தகவல் அதிகாரி (சிபிஐஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.