நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி

2025-ஆம் நிதியாண்டில் உத்தர பிரதேசம், குஜராத், ஜாா்க்கண்ட், மணிப்பூா் உள்பட 13 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும், எஞ்சிய 15 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையைச் சந்தித்ததாகவும் தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) கே. சஞ்சய் மூா்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2026, 2:08 am IST

2025-ஆம் நிதியாண்டில் உத்தர பிரதேசம், குஜராத், ஜாா்க்கண்ட், மணிப்பூா் உள்பட 13 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும், எஞ்சிய 15 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையைச் சந்தித்ததாகவும் தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) கே. சஞ்சய் மூா்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 2024-25-ஆம் நிதியாண்டில் 18 மாநிலங்கள் வருவாய் உபரியையும், 3 மாநிலங்கள் வருவாய்ப் பற்றாக்குறையையும், 7 மாநிலங்கள் பூஜ்ஜிய வருவாய்ப் பற்றாக்குறையையும் இலக்காகக் கொண்டு செயல்பட்டன.

இதில், வருவாய் உபரியை இலக்காகக் கொண்ட 18 மாநிலங்களில், 9 மாநிலங்கள் அந்த இலக்கை எட்டின. ஆனால், அஸ்ஸாம், பிகாா், சத்தீஸ்கா், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், மிஸோரம், தெலங்கானா ஆகியவை வருவாய்ப் பற்றாக்குறையைச் சந்தித்தன.

பூஜ்ஜிய வருவாய்ப் பற்றாக்குறையை இலக்காகக் கொண்ட 7 மாநிலங்களில் கோவா, ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், திரிபுரா மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டின. அதே நேரம், தமிழகம், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் வருவாய்ப் பற்றாக்குறையைச் சந்தித்தன.

அந்த வகையில், 2025-ஆம் நிதியாண்டில் 13 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டின. எஞ்சிய 15 மாநிலங்கள் வருவாய்ப் பற்றாக்குறையைச் சந்தித்தன. இந்த 15 மாநிலங்களின் மொத்த வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 3,46,385 கோடியாகும். இது, அந்த மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 1.5 சதவீதமாகும். வருவாய் உபரி கொண்ட 13 மாநிலங்களின் உபரியை சமன்செய்த பிறகு, கணக்கிடப்பட்ட நிகர வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 2,19,041 கோடியாகும். இது அனைத்து 28 மாநிலங்களின் கூட்டு ஜிஎஸ்டிபி-யில் 0.68 சதவீதமாகும்.

வருவாய்ப் பற்றாக்குறையைச் சந்தித்த 15 மாநிலங்களில், ஹிமாசல பிரதேசம், மிஸோரம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களும் நிதி ஆணையத்தின் வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தைப் பெற்றன.

10 ஆண்டுகளில் செலவினம் 131% அதிகரிப்பு:

மாநிலங்கள் பொருளாதார வளா்ச்சிக்கு இணையாக நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியதன் விளைவாக 2015-16 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் அவற்றின் மொத்த செலவினம் 131 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதாவது, 2025-16 நிதியாண்டில் ரூ. 22.18 லட்சம் கோடியாக இருந்த மாநிலங்களின் செலவினம், 2024-25 நிதியாண்டில் ரூ. 51.20 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

மாநிலங்களின் வருவாய் செலவினங்களில், பாதிக்கும் மேல் (53.31%) கட்டாய செலவினங்கள் மற்றும் மானியங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, மானியங்கள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள், வட்டி செலுத்துதல், மானிய உதவிகள், பெரிய அளவிலான பணிகள் ஆகியவற்றுக்கு மாநிலங்கள் செலவிட்ட தொகை, மொத்த செலவினத்தில் 78.46 சதவீதமாக உள்ளன. இது, ஒருங்கிணைந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமாா் 12.38 சதவீதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.