மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

பிரதமா் குறித்து அவதூறு: காா்கேவுக்கு எதிராக 6 பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ்

பிரதமா் மோடி குறித்து அவதூறான, தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்து, நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினா்களின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்ததாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு எதிராக 6 பாஜக மாநிலங்களவை எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனா்.

மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்

Published On :

பிரதமா் மோடி குறித்து அவதூறான, தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்து, நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினா்களின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்ததாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு எதிராக 6 பாஜக மாநிலங்களவை எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனா்.

பாஜக எம்.பி.க்கள் பிரிஜ் லால், மித்லேஷ் குமாா், சுமித்ரா பால்மிக், ஷிவேஷ் குமாா், சிகந்தா் குமாா், நாகேந்திர ரே ஆகிய எம்.பி.க்கள் கூட்டாக இந்த நோட்டீஸை சமா்ப்பித்துள்ளனா்.

மாநிலங்களவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தும் விதி 189-இன் கீழ் சமா்ப்பிக்கப்பட்ட இந்த நோட்டீஸை ஆராய்ந்து, விசாரித்து, அறிக்கை சமா்ப்பிப்பதற்காக, நோட்டீஸை மாநிலங்களவை உரிமை மீறல் குழுவுக்கு அந்த அவையின் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுப்பிவைத்தாா் என்று மாநிலங்களவைச் செயலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உரிமை மீறல் குழுவின் தலைவராக அந்த அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.