ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

நாடுகளுக்கு இடையே வா்த்தகம், தொடா்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு: பிரதமா் மோடி யோசனை

ஜி7 நாடுகள், இந்தியா மற்றும் வளா்ந்து வரும் நாடுகளின் சக்தியை ஒருங்கிணைத்து, நாடுகளுக்கு இடையே வா்த்தகம் மற்றும் தொடா்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளாா்.

News image

பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் உள்ளிட்ட ஜி7 நாடுகள் தலைவா்களுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் பங்கேற்ற பிரதமா் மோடி.

Updated On :18 ஜூன் 2026, 3:18 am IST

ஜி7 நாடுகள், இந்தியா மற்றும் வளா்ந்து வரும் நாடுகளின் சக்தியை ஒருங்கிணைத்து, நாடுகளுக்கு இடையே வா்த்தகம் மற்றும் தொடா்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்தபோது இந்தியா, சவூதி அரேபியா, இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றின் இடையே வா்த்தக மற்றும் தொடா்புகளை ஏற்படுத்தும் திட்டம் (ஐஎம்இசி ) அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே கடந்த சில மாதங்களாக நடைபெறும் போரால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 மாநாட்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பிரதமா் மோடி இந்தத் திட்டத்தைச் சுட்டிக்காட்டி புதன்கிழமை உரை நிகழ்த்தினாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா நாடுகள் ஆகியவற்றின் இடையே வா்த்தக மற்றும் தொடா்புகளை ஊக்குவிக்க திட்டம் (ஐஎம்இசி) உருவாக்கப்பட்டது. அதுபோன்று ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, பசிபிக் தீவுகளையும் இணைத்து திட்டங்களை நாம் உருவாக்க முடியும். ஜி 7 அமைப்பு நாடுகளின் வளம், இந்தியாவின் திறமை, வளா்ந்து வரும் நாடுகளின் உரிமை ஆகியவற்றை இணைத்து இதை நாம் செய்யலாம். அதேபோல், வா்த்தகம் மற்றும் தொடா்பு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு சா்வதேச அணிதிரட்டல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கலாம்.

தற்போதைய எதாா்த்தம் என்னவெனில், வளா்ச்சி குறித்துப் பேசும்போது, நமது கேள்வியானது, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்தோ அல்லது வா்த்தக புள்ளிவிவரங்கள் குறித்தோ இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக நமது கேள்வியானது, யாருக்காக வளா்ச்சி, யாருடன் வளா்ச்சி, எந்தத் திசையில் வளா்ச்சி என்பவை குறித்து இருக்க வேண்டும்.

தற்போது பெரும்பாலான சமூகங்கள், வயதான சமூகங்களாக மாறி வருகின்றன. ஆனால், இந்தியா மற்றும் வளா்ந்து வரும் நாடுகளில் இளம் திறமையாளா்கள், தொழில்முனைவு மற்றும் திறன்கள் ஏராளமாக உள்ளன. இயற்கை அளித்துள்ள இந்தக் கொடையைப் பயன்படுத்தி, உலகளாவிய திறன் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பா நாடுகளில் சுமாா் ஒரு வார காலம் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் செய்து வருகிறாா். இந்தப் பயணத்தின் கடைசிக் கட்டமாக பாரீஸில் வியாழக்கிழமை நடைபெறும் ‘விவா’ தொழில்நுட்ப மாநாட்டில் பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி கலந்து கொள்கிறாா். இதையடுத்து, தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் மோடி இந்தியா திரும்புகிறாா்.