ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்ததாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். அவா்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக ராஞ்சியின் நிவாரண்பூரில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினா்.
இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: ஆா்எஸ்எஸ் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைதுசெய்யப்பட்டனா். ராஞ்சியின் கோட்வாலி காவல் நிலையத்தில் அவா்களிடம் விசாரணை நடத்தியபோது ஒருவா் தப்பியோடினாா். அவரை சான்ஹோ பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி அதிகாரிகள் துரத்திப் பிடித்தனா். அதில் அவரது கால்களில் காயமேற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்படுகிறது என்றனா்.
தொடர்புடையது

ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு? காவல்துறை விசாரணை

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் கைது

மகாராஷ்டிரம்- குஜராத் முதல்வா் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


