தில்லியில் நடைபெற்ற செய்யறிவு மாநாடு மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி விமர்சித்துள்ளார்.
தில்லி பாரத மண்டபத்தில் கடந்த பிப். 16 முதல் 21 வரை சர்வதேச செய்யறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், பிரேஸில் அதிபர் லூயி இனாசியோ லுலா டா சில்வா, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், உலகம் முழுவதும் இருந்து முன்னணி ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்துகொண்ட அமர்வும் நடைபெற்றது.
அப்போது அனைத்து நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் (சிஇஓ) ஒரே மேடையில் ஏற்றிய பிரதமர் மோடி, தனது வலதுபுறத்தில் இருந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் இடதுபுறத்தில் இருந்த ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோரின் கைகளைக் கோர்த்தார். மேலும், அனைவரையும் ஒன்றாக கைகோர்க்க பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
ஆனால், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் அருகிலிருந்த ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி கைகோர்க்க மறுத்துவிட்டார். அவர்கள் இருவரும் கைகோர்க்காமல் இருந்த புகைப்படம் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த டாரியோ அமோடியிடம், தில்லி ஏஐ மாநாட்டில் நடந்த சம்பவம் குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த டாரியோ அமோடி, “உண்மையில் அந்த ஏஐ மாநாடு மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அனைவரையும் ஒன்றாக மேடைக்கு அழைத்தார்கள். திடீரென்று குழுப் படம் எடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் ஒன்றாக கைகோர்த்துக் கொள்ளுமாறு கூறினார். நான் ஒருவித குழப்பம் அடைந்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், “நான் குறிப்பாக இந்தியாவைப் பற்றி எதுவும் குறை கூறவில்லை. ஆனால், அரசுத் தலைவர்கள் பங்கேற்கும் இதுபோன்ற சர்வதேச உச்சி மாநாடுகள் எல்லாம் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
Anthropic CEO laughing at Narendra Modi pic.twitter.com/JfJ87eilJT
— HitOrbit (@PromptlyHit) June 19, 2026
Summary
India AI Summit was extremely disorganised': Anthropic CEO Dario
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











