ஜி7 உச்சிமாநாட்டுக்கிடையே அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாகப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரெஞ்சு நகரான ஏவியன்-லெஸ்-பைன்ஸ்-இல் வரும் ஜூன் 15 தொடங்கி 17 வரை நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில், இந்தியா உள்பட உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பங்கேற்கின்றன. ஜி7 மாநாட்டையொட்டி, பிரான்ஸ், ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் ஜூன் 13 முதல் 19 வரை பிரதமா் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.
ஜி7 மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலகத் தலைவர்கள் பலர் வருகை தர உள்ள நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாகப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தகம், விசா, எரிசக்தி ஒத்துழைப்பு உள்பட முக்கிய விவகாரங்களைப் பற்றி பேச திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். ஜூன் 16-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். மேலும், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
Summary
G7 - Modi, Trump likely to meet at G7 summit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி நல்ல நண்பர்: இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள டிரம்ப் விருப்பம்

51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!

10 கோடி பார்வையாளர்களைக் கடந்த மோடி - மெலோனி விடியோ!

பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!




