பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரு நாடுகளுக்கான தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை(ஜூன் 18) தில்லி திரும்பினார்.
பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்யும் வேளையில், வரும் காலங்களில் இந்தியா-பிரான்ஸ் நட்பு மேலும் வலுப்பெறும் என்று எக்ஸ் பக்க பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்சுக்கான இந்தப் பயணம், செயல்பாடுகள் மற்றும் அதன் முடிவுகள் அடிப்படையில் விரிவானதாக இருந்தது.
நீஸ் நகரில் 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியில் தொடங்கிய இந்தப் பயணம், ஜி7 மாநாட்டிற்காக எவியன் நகருக்கும், பின்னர் பாரிஸுக்கும் சென்றேன்.
பாரிஸில் 'விவாடெக் 2026' உச்சிமாநாடு மற்றும் ஒரு பெரிய சமூக நிகழ்ச்சியில் உரையாற்றினேன். மேலும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரிகளையும் சந்தித்தேன்.
எனது நண்பர் அதிபர் மக்ரோன், பிரான்ஸ் அரசு மற்றும் மக்கள் அந்த நாட்டு மக்கள் காட்டிய அன்பான வரவேற்பிற்கு நான் குறிப்பாக நன்றியுள்ளவனாக இருப்பதாக மோடி கூறினார்.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் ஒரு அறிக்கையில், பிரதமர் மோடியின் இந்த வெற்றிகரமான பயணம், இந்தியா-பிரான்ஸ் சிறப்பு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்றும், முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
பிரதமர் மோடி தனது பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்தபோது, அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் அவருக்காக இந்தியில் ஒரு சிறப்பு பிரியாவிடை காணொளிச் செய்தியைப் பதிவு செய்தார். நீஸ் நகரில் நடைபெற்ற 'பாரத் இன்னோவேட்ஸ்' மற்றும் பாரிஸில் நடைபெற்ற 'விவாடெக் 2026' ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்தியாவின் வளர்ந்து வரும் புத்தாக்க வலிமையை உலகம் கண்டுவருகிறது என்று அவர் கூறினார்.
விவாடெக் உச்சிமாநாட்டில், தொழில்நுட்பம் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், 2 லட்சம் புத்தாக்க நிறுவனங்களுடன் உலகின் துடிப்பான நாடாக இந்தியா விளங்குகிறது. எனவே, இந்தியாவில் முதலீடுகள் செய்தால் அது உலக நாடுகள் அனைத்துக்கும் பலனளிக்கும். உலகளாவிய கண்டுபிடிப்பாளர்களை "இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி அனைவருக்கும் பயன் அளிக்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.
இந்தப் பயணத்தின் போது, இந்தியாவும் பிரான்சும் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தின. செயிண்ட்-கோபேன், மிஸ்ட்ரல் ஏஐ மற்றும் சிஎம்ஏ சிஜிஎம் ஆகிய பிரெஞ்சு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் நம்பிக்கை தெரிவித்ததோடு, உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை கடல்சார் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கான திட்டங்களையும் அறிவித்தனர்.
முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், சமூக ஊடகச் செய்தி ஒன்றின் மூலம் பிரதமர் மோடிக்கு இந்தியில் நன்றி தெரிவித்தார். இந்தப் பயணம், முக்கியத் துறைகளில் இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மையை குறிப்பிடத்தக்க அளவில் வலுப்படுத்தியுள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
Summary
Prime Minister Narendra Modi has left for New Delhi after concluding his successful and ‘productive’ visit to Paris,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடு இந்தியா: நியூசிலாந்தில் பிரதமர் மோடி பேச்சு!

ஸ்லோவாக்கியா நாடாளுமன்றத் தலைவருக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவைப் பரிசளித்த பிரதமர் மோடி!

ஒரு வார கால வெளிநாட்டுப் பயணம்: பிரான்ஸ் புறப்பட்டாா் பிரதமா் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறாா்!

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |




