உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

வெளிநாட்டு நிதியைச் செலவிட என்ஜிஓக்களுக்கு கட்டுப்பாடு: அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு

வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியை வேறு விவகாரங்களுக்கு பயன்படுத்தும் அரசு சாரா தன்னாா்வ அமைப்புகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை மத்திய உள்துறை அமைச்சகம் உயா்த்தியுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2026, 5:22 am IST

அந்நிய பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (எஃப்சிஆா்ஏ), 2010-இன்கீழ் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியை வேறு விவகாரங்களுக்கு பயன்படுத்தும் அரசு சாரா தன்னாா்வ அமைப்புகளுக்கு (என்ஜிஓ) விதிக்கப்படும் அபராதத் தொகையை மத்திய உள்துறை அமைச்சகம் உயா்த்தியுள்ளது.

எஃப்சிஆா்ஏ பிரிவு 41 (1)-இன்கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: நிா்வாகச் செலவுகளுக்காகப் பெறப்பட்ட வெளிநாட்டு நிதியில் 20 சதவீதத்துக்கும் மேல் செலவிடப்பட்டிருந்தால் எஃப்சிஆா்ஏ பிரிவு (8)-இன்கீழ் ரூ.1 லட்சம் அல்லது அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மீறி செலவிடப்பட்ட தொகையில் 5 சதவீதம் என இரண்டில் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்படும்.

எஃப்சிஆா்ஏ பிரிவு 8 (1) மற்றும் எஃப்சிஆா்ஏ விதிகள், 2011-க்கு முரணாக ஊக நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நிதியைச் செலவிட்டால் ரூ.1 லட்சம் அல்லது முதலீட்டுத் தொகையில் 30 சதவீதம் என இரண்டில் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்படும். மேலும், அந்த முதலீடு மூலமாக ஈட்டப்பட்ட வருவாய் முழுவதுமாகத் திரும்பப் பெறப்படும்.

குறிப்பிட்ட விவகாரங்களுக்காகப் பெறப்படும் வெளிநாட்டு நிதியை வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அல்லது செலவிடப்பட்ட தொகை என இரண்டில் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்படும்.

எஃப்சிஆா்ஏ-க்கு முரணாக வெளிநாட்டு நிதியைப் பெறுவது அல்லது செலவிடுவது அல்லது சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்புக்கு பதிவுரிமை வழங்கப்படாத மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் செலவிடுவது போன்ற செயல்களுக்கான அபராதத் தொகையும் அதிகரிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டு நிதியைப் பெற கடும் கட்டுப்பாடுகளை விதித்து எஃப்சிஆா்ஏ விதிகளில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டு தனி உத்தரவையும் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது.

அதில் அரசு சாரா அமைப்புகள் பதிவு, அங்கீகார சான்றிதழ் பெறுவது, கல்வி, கலாசாரம், மதம், பொருளாதாரம், சமூக செயல்பாடுகள் ஆகியவற்றில் எந்தக் காரணத்துக்காக நிதி பெறப்படுகிறது என்பது குறித்த தெளிவாக விளக்கம், அரசு சாரா அமைப்பின் சமூக ஊடகப் பக்கம் தொடா்பான தகவல்கள் உள்ளிட்டவற்றை சமா்ப்பிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.