கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மகளும் காதலனும் தலைமறைவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு கஸ்தூரி நகர் முக்கிய சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோம சுந்தர் (52), மனைவி முத்து லட்சுமி (48), மகள் சுப்ரியா (19) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்ததாக காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது.
இந்த வீட்டில், கொலை செய்யப்பட்ட தம்பதியின் மூத்த மகள் ஸ்வேதா, தன்னுடைய காதலன் கென்னத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த வீட்டுக்கு, கொலையானவர்கள் வந்த போது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கொலையில் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொலைசெய்துவிட்டு தப்பியோடிய இருவரையும் காவல்துறை தேடி வருகிறது.
காதலனுடன் வாழ்ந்து வந்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொலை நடந்ததா? இல்லை ஸ்வேதா ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கி வைத்திருந்தார் என்பதால், அது குறித்து பெற்றோர் சண்டையிட்டதால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டுக்குள் முத்துலட்சுமி தனியாக இருந்த போது அவரை குற்றவாளிகள் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்திருக்கலாம். பிறகு குற்றவாளிகள் வீட்டுக்குள்ளேயே ஒளிந்திருந்து, சுப்ரியா வந்ததும், அவளையும் குத்திக் கொலை செய்துவிட்டு, பிறகு சோம சுந்தரம் வீட்டுக்கு வரும்போது, அதே ஆயுதத்தால் அவரையும் கொன்று, அங்கிருந்து தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மற்றவர்கள் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்த நிலையில், சோமசுந்தரம் மட்டும் படுகாயங்களுடன் குடியிருப்பிலிருந்து வெளியே உதவிக் கேட்டுக் கொண்டே ஓடி வந்து பலியானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்தக் கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? சூழ்நிலை சந்தர்ப்பத்தால் நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Summary
Three members of the same family murdered in Bengaluru! Daughter and her lover absconding.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயக்குநராகும் ராகவா லாரன்ஸ் மகள்?

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
பெங்களூரில் உகாண்டா பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை: மருத்துவப் பரிசோதனையில் தகவல்!
பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கு எபோலா வைரஸ் பாதிப்பு?
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




