நடிகர் ராகவா லாரன்ஸின் மகள் திரைப்பட இயக்குநராகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் கவனம் பெற்று பின் நடிகராகவும் நல்ல இடத்தைப் பிடித்தவர் ராகவா லாரன்ஸ். பல படங்களில் துணை நடிகராக நடித்து, நாயகனாகியும் தனக்கான வரவேற்பைப் பெற்றார்.
ராகவா லாரன்ஸின் பெரிய வெற்றிப்படமாக முனி அமைய, தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா - 2 ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் லாரன்ஸின் மார்க்கெட்டை உயர்த்தியது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். தற்போது, காஞ்சனா - 4 படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் மகள் ராகவி இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்த ராகவி, லாரன்ஸ் தயாரிப்பிலேயே முதல் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Reports suggest that actor Raghava Lawrence's daughter is set to become a film director.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









