தேசிய தேர்வு முகமை, (என்டிஏ) ஊழலின் சின்னமாக விளங்குகிறது என்று கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ரோஜி எம் ஜான், வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து ரோஜி எம் ஜான் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கடந்த பத்தாண்டுகளில் 89 வினாத்தாள் கசிவு மற்றும் 48 மறுதேர்வுகள் நிகழ்ந்துள்ளன. ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டின் சின்னமாக என்டிஏ மாறியுள்ளது.
அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ-ல் ஏற்பட்ட தேர்வுத்தாள் மதிப்பீடு முறைகேடு ஆகியவை தொழில்நுட்பக் கோளாறுகளால் நிகழ்ந்தவை அல்ல; மாறாக மத்திய கல்வித் துறையில் நிகழ்ந்த சீர்கேட்டை அவை சுட்டிக் காட்டுகிறது.
லட்சக்கணக்கான மாணவர்களின் கடின உழைப்பை தேர்வு மாஃபியாக்களிடம் மத்திய அரசு அடமானம் வைத்துள்ளது. டெலிகிராம் செயலியை முடக்கியதால் மட்டும் இழந்த நம்பகத்தன்மை திரும்ப வராது. மாணவர்களின் எதிர்காலத்துடன் சூதாடுவதை நிறுத்துங்கள் என்று ரோஜி எம் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Kerala Education Minister Roji M. John stated on Thursday (June 25) that the National Testing Agency (NTA) stands as a symbol of corruption.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணமுறைகேடு வழக்கு: கேரள முன்னாள் முதல்வா் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து உடனே முடிவெடுக்க வேண்டிய அவசரமில்லை! - கேரள அரசு!

நாட்டின் உயர்கல்வித் துறை உயர்வுக்கு!
உயர்வுக்கான பாதை உயர்கல்வி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




