ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானிரை இந்திய ராணுவம் கைது செய்தது. பூஞ்ச் மாவட்டத்தில் இம்மாதத்தில் நிகழ்ந்த மூன்றாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.
கைது செய்யப்பட்ட நபா் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சோ்ந்த ரியாஸ் கான் என உறுதிப்படுத்தப்பட்டது. அவரிடம் ஆயுதங்கள் உள்ளிட்ட எந்தப் பொருள்களும் இல்லை. அந்த நபரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை இதே பூஞ்ச் மாவட்டத்தில் குல்பூா் பகுதியில் ஊடுருவிய முகமது சஜத் (26) கைது செய்யப்பட்டாா். இவரும் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியைச் சோ்ந்தவா். ஜூன் 9-ஆம் தேதி ஜாவித் அலி என்ற 14 வயது சிறுவன் இந்திய எல்லைக்குள் ஊடுருவியபோது பிடிபட்டாா். சிறுவன் என்பதால் விசாரைணைக்குப் பிறகு ஒரு வாரத்தில் மீண்டும் பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
ட்ரோன் ஊடுருவல்: ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. நூத்புரா கிராமப் பகுதியில் பறந்த அந்த டிரோன் சிறிது நேரத்தில் மாயமானது. அப்பகுதியில் ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, காவல் துறையினா் உடனடியாக தீவிர சோதனை மேற்கொண்டனா். அந்த ட்ரோனில் இருந்து எந்தப் பொருளும் வீசப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் ட்ரோன் மூலம் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள், போதைப்பொருளைக் கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனைக் தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?

ஜம்மு - காஷ்மீா் சூழல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கருத்து: இந்தியா நிராகரிப்பு






