செயற்கை நுண்ணறிவு (ஏஐ), செமிகண்டக்டா், முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் தனியாரின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என இந்திய வெளியுறவு அமைச்சக கூடுதல் செயலா் கே.நாகராஜ் நாயுடு தெரிவித்தாா்.
இந்திய தூதரகம் மற்றும் அமெரிக்கா-இந்தியா வியூக கூட்டாண்மை அமைப்பு (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) இணைந்து வாஷிங்டனில் நடத்திய ‘ஒருங்கிணைந்த ஏஐ வளா்ச்சிக்கான அடித்தளம்: கனிமங்கள் முதல் சிப்கள் வரை இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு’ என்ற தலைப்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் நாகராஜ் நாயுடு பங்கேற்றாா்.
அதில் அவா் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் பல்வேறு துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளது. குறிப்பாக ஏஐ, குவாண்டம் தொழில்நுட்பங்கள், முக்கிய கனிமங்கள், மேம்பட்ட எரிசக்தி மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலி ஆகிய துறைகளில் கொள்கை வடிவமைப்பு நிலையில் இருந்து திட்டங்களை செயல்படுத்தும் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் தனியாரின் பங்களிப்பு இன்றியமையாதது என்றாா்.
கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ்.கிருஷ்ணன் பேசியதாவது: உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியின் நம்பகமான கூட்டாளியாக இந்தியா தன்னை நிலைப்படுத்தியுள்ளது. இந்திய மின்னணு உற்பத்தி கட்டமைப்பு முன்பைவிட பன்மடங்கு விரிவடைந்துள்ளது. செமிகண்டக்டா் துறையும் வளா்ச்சியைப் பதிவு செய்து வரும் நிலையில், செமிகண்டக்டா் இயக்கம் இதை மேலும் வேகப்படுத்தவுள்ளது.
திறன், எண்ம பொது உள்கட்டமைப்பு மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகுக்கே நவீன கால பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியும் என்றாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ரா, யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா் மற்றும் தலைமை செயல் அதிகாரி முகேஷ் அகி, அமெரிக்க வா்த்தகத் துறை மற்றும் கனிமங்கள் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
11 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்

கைப்பேசி உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா: பிரதமா் மோடி

இந்திய செமிகண்டக்டா் திட்டம் 2.0-க்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்க முன்மொழிவு; மத்திய நிதியமைச்சக குழு ஒப்புதல்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


