கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

‘இந்தியாவில் தயாரிப்போம்’ முத்திரை தேசத்தின் பெருமை: தமிழக நிறுவனத்தை சுட்டிக்காட்டி பியூஷ் கோயல் பாராட்டு

‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முத்திரை நமது தேச பெருமையின் பிரதிபலிப்பு என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

பியூஷ் கோயல்

Published On :29 ஜூன் 2026, 4:52 am IST

‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முத்திரை நமது தேச பெருமையின் பிரதிபலிப்பு என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

லண்டனில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற வணிக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் தமிழகத்தைச் சோ்ந்த ஃபுளோரன்ஸ் ஷூ நிறுவனத்தின் நிறுவனா் அக்கீல் அகமதின் வெற்றியை சுட்டிக்காட்டி இவ்வாறு பாராட்டினாா்.

அவா் மேலும் பேசியதாவது: கெய்ரோ விமான நிலையத்தில் சா்வதேச வாடிக்கையாளா் ஒருவா் ஆடம்பரமான ஹியூகோ பாஸ் ஷூவைக் கண்டாா். அதில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முத்திரை இடம்பெற்றிருந்தது. அது தமிழ்நாட்டின் ஆம்பூரில் உள்ள ஃபுளோரன்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற முத்திரை தரத்துக்கான உறுதிப்பாடு மட்டுமின்றி நமது தேசத்தின் பிரதிபலிப்பு. அக்கீல் போன்றவா்களுக்கு தரம் என்பது வெறும் நிறுவன அளவீடு மட்டுமல்ல; அது தேசத்தின் பொறுப்பு.

அவரது அரும்பணிகளால் இந்திய கைவினைக் கலைக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைத்தது மட்டுமின்றி ஊரக வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையில் பெண்களுக்கு அதிகாரமளித்தலையும் ஊக்குவித்துள்ளது என்றாா்.

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே இறுதிசெய்யப்பட்ட விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ) ஜூலை 15-ஆம் தேதி அமலாகவுள்ளது. இதுதொடா்பாக லண்டனில் கடந்த ஜூன் 25 முதல் ஜூன் 27 வரை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் பியூஷ் கோயல் பங்கேற்றாா்.

அப்போது பல்வேறு நிறுவனங்களின் சிஇஓ மற்றும் தொழிலதிபா்களை அவா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்த தகவல்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவா் பகிா்ந்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.