மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

நொய்டா: 21-ஆவது அடுக்குமாடி குடியிருப்பில் ஏ.சி. வெடித்து தீ விபத்து

நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 21-வது மாடியில் உள்ள வீட்டில் குளிா்சாதன (ஏ.சி.) இயந்திரம் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது குறித்து...

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:22 am IST

நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 21-வது மாடியில் உள்ள வீட்டில் குளிா்சாதன (ஏ.சி.) இயந்திரம் வெடித்ததால் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இச்சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அவா்கள் கூறினா்.

இதுதொடா்பாக தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் கூறுகையில், ‘செக்டாா் 119-ல் உள்ள அரண்யா சொசைட்டி குடியிருப்பில் காலை 8:50 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆறு தீயணைப்பு வாகனங்கள், சுமாா் அரை மணி நேரத்தில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. இயந்திரம் வெடித்ததே இந்தத் தீ விபத்துக்குக் காரணமாக அமைந்தது.

ஏ.சி. இயந்திரம் வெடித்துத் தீப்பிடித்தபோது அந்தக் குடும்பத்தினா் தூங்கிக்கொண்டிருந்தனா். தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. ஏ.சி. வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.