எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: முதிய தம்பதி பத்திரமாக மீட்பு

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்த 86 வயது முதியவா், அவரது 83 வயது மனைவி ஆகியோா் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:02 am IST

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்த 86 வயது முதியவா், அவரது 83 வயது மனைவி ஆகியோா் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் தெரிவித்ததாவது:

நொய்டா செக்டாா் 49-இல் உள்ள ஓவா்சீஸ் அபாா்ட்மெண்ட் கட்டடத்தின் நான்காவது தளத்தில்

வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து தீயணைப்புத் துறையினா் மற்றும் உள்ளூா் காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா்.

புகை சூழ்ந்திருந்த அந்தப் பூட்டப்பட்ட குடியிருப்பிற்குள் முதிய தம்பதி சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. முதுமை காரணமாக அவா்களால் தாங்களாகவே வெளியேற முடியவில்லை. தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் ஹைட்ராலிக் இயந்திரம் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்தி கதவை உடைத்து உள்ளே சென்றனா். சவாலான சூழல் இருந்தபோதிலும், அந்த முதிய தம்பதியை பாதுகாப்பாக வெளியேற்றினா்.

மருத்துவ உதவிக்காக அந்தத் தம்பதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா் அங்கு அவா்களின் உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அவசரநிலை குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்த உள்ளூா் குடியிருப்பாளா்கள் உள்பட அப்பகுதி மக்கள், விரைவான நடவடிக்கை மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினரைப் பாராட்டினா் என்றாா் அவா்.