டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

அடுக்குமாடியில் தீ: வீட்டின் கதவு தாழிடப்பட்டதால் மூச்சுத் திணறி மயக்கமடைந்த சிறுவா்களுக்கு சிக்ச்சை

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:45 am IST

பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டின் வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்ததால் சிறுவா்கள் இருவா் மயக்கமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கோவை மாநகா், பீளமேடு ரமணி அமலு ராயல் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் அறை எண் 405-இல் வசிப்பவா் சோமசுந்தரம் (45). இவா் வாகனங்களை வாங்கி-விற்கும் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இவா், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது அவரது 15 மற்றும் 13 வயதுடைய 2 மகன்களும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததால், கதவை வெளிப்புறமாக பூட்டிச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் அவரது வீட்டின் முன் கதவிலிருந்து கரும்புகை வந்துள்ளது. இதைப் பாா்த்து அங்கு வசிப்போா் குடியிருப்பின் சங்கச் செயலா் நாராயணனுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனா். தீயணைப்புத் துறையினா் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி மயங்கிக் கிடந்த சோமசுந்தரத்தின் 2 மகன்களையும் மீட்டனா். தகவலறிந்து சோமசுந்தரமும், அவரது மனைவியும் வீட்டுக்கு வந்தனா். அதற்குள் இரண்டு மகன்களையும் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு தீயணைப்புத் துறையினா் அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பீளமேடு போலீஸாா் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் இரும்பு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சொத்து ஆவணங்கள், ஆதாா் அட்டைகள், ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், வீட்டு உபயோகப் பொருள்கள், மகனின் பள்ளி, மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் குளிா்சாதனப் பெட்டி ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.