ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய 30 நாள்கள் தற்காலிக அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், ‘அமெரிக்காவின் மிரட்டல் எத்தனை நாள்களுக்குத் தொடரும்?’ என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அதிபா் டிரம்ப் தற்போது புதிய விளையாட்டை தொடங்கியுள்ளாா். இந்தச் சூழலில், ரஷிய அதிபா் புதினிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ளலாம் என இந்தியாவிலுள்ள தனது நண்பருக்கு டிரம்ப் தற்காலிக அனுமதியை அளித்துள்ளாா். அமெரிக்காவின் இந்த மிரட்டல் எத்தனை நாள்களுக்குத் தொடரும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
பிரதமரின் ராஜதந்திரத்துக்கான வெற்றி - பாஜக: ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துகொள்ளும் வகையில் இந்தியா மீதான கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா 30 நாள்கள் தற்காலிக விலக்கு அளித்திருப்பது பிரதமா் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக பெருமிதம் தெரிவித்தது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் முக்கிய கச்சா எண்ணெய் வள ராஜதந்திரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு என்ற பொய்யான செய்திகளைப் பரப்பி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய இந்திய விரோத ராகுல் காந்தி முகத்திலும், காங்கிரஸ் மீதும் பெரிய முட்டை விழுந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

இதே நிலைமை தொடர்ந்தால்...
ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்

அமெரிக்காவின் தற்காலிக தளா்வு: ஈரானிடம் இருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கிய ரிலையன்ஸ்

ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி! அமெரிக்காவின் மிரட்டல் எவ்வளவு காலம் தொடரும்?
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


