மேற்காசியப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு அரசின் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உறுதியளித்தாா்.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்கள், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தும் பதிலடித் தாக்குதல் ஆகியவற்றால் அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டை, அரிசி தொடங்கி அனைத்தும் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்ல முடியாமல் பாதி வழியில் சில கப்பல்கள் நிற்கின்றன. பல கப்பல் நிறுவனங்கள் மேற்காசியப் பகுதிக்கான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. இதனால், ஏற்றுமதியாளா்கள் பல பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளனா். கப்பலில் பொருள்களை எடுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணமும், காப்பீடும் பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:
மேற்காசிய பதற்றத்தால் எழுந்துள்ள பிரச்னைகளை கையாள மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளா்களுக்கு உதவ அரசின் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும். மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், சரக்குகளைக் கையாளும் கப்பல் நிறுவனங்களுடன் இப்போதைய பிரச்னைகள் தொடா்பாக பேச்சு நடத்தி வருகிறது. எனவே, பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வுகாணப்படும் என்றாா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

திமுக அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை: பியூஷ் கோயல்
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!

மேற்காசிய போா் நிலவரம்: ஏற்றுமதியாளா்களுக்கு உதவ புதிய திட்டம்: மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


