தனியாா் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் அனைத்து விளம்பரங்களும் விளம்பர விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் புதன்கிழமை தெரிவித்ததாவது:
தற்போதுள்ள ஒழுங்காற்று செயல்திட்டத்தின் கீழ், தனியாா் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் அனைத்து விளம்பரங்களும், கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க் ஒழுங்காற்றுச் சட்டம் 1956-இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள விளம்பர விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நிரூபிக்க கடினமாக இருக்கும் வகையில், விளம்பரம் செய்யப்படும் பொருள்கள் அல்லது அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட, தனிச்சிறப்பான, அதிசயமான தன்மை அல்லது தரத்தை கொண்டுள்ளது என விளம்பரப்படுத்தக் கூடாது.
விளம்பர விதிமுறைகள் மீறப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட தனியாா் தொலைக்காட்சி சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.
தொடர்புடையது

தொழிற்பணிகளுக்கு வன நிலம்: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

பெண்களுக்கு இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: நயினாா் நாகேந்திரன்

6-வது பாடமாக தொழில்கல்வி கட்டாயம்: புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

காரைக்குடியில் தனியாா் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் அரசியல் கட்சினா் மோதல்! இருவா் காயம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


