நாடு முழுவதும் மக்களைப் பாதிக்கும் கடுமையான பிரச்னையாக மாறியுள்ள எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.
எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை சூழ்நிலை உருவாகி வருவதால் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் உருவாகி வருவதாகத் தில்லியின் முன்னாள் முதல்வர் கூறினார்.
நாட்டில் எல்பிஜிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எல்பிஜியில் 90 சதவிகிதம் ஹோர்முஸ் நீரிணையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதேயாகும்.
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அடுத்த இரண்டு நாள்களில் 50 சதவீத உணவகங்கள் மூடப்படும் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பெங்களூர், மும்பை ஆகிய முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்தியாவின் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பிரதமர் நரேந்திர மோடி தகர்த்து ஈரானை எதிரியாக்கியுள்ளதாக கேஜரிவால் குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் 75 ஆண்டுக்கால அணிசேரா கொள்கையைத் தகர்த்ததன் மூலம் பிரதமர் மோடி தவறு செய்துவிட்டார். நாம் யாருடனும் கூட்டணி வைத்திருக்கக்கூடாது.
போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக பேசினார். ஈரானை எங்கள் எதிரியாக்கிவிட்டோம் என்று அவர் கூறினார்.
பனிப்போர் காலங்களில் கூட இந்தியா அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி வந்தது என ஆம் ஆத்மி தலைவர் குற்றம் சாட்டினார்.
Summary
AAP national convenor Arvind Kejriwal on Wednesday slammed the Centre for 'heavy LPG shortage' affecting people across the country and questioned the prime minister's "support" for Israel and the US.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 8-வது இந்திய கப்பல்!

தெலங்கானா: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல்

எல்பிஜி சிலிண்டர் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா?

நாட்டில் எல்பிஜி பற்றாக்குறையால் 1 கோடி போ் வேலையின்றி தவிப்பாா்கள்: கேஜரிவால்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


