காங்கிரஸும், ராகுல் காந்தியும் பாஜகவின் 'பி-டீம்' என கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை (மார்ச் 21) கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிடிஐ - க்கு அளித்த பேட்டியில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கேரள முதல்வரைத் தவிர, நாட்டில் உள்ள மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை மத்தியப் புலனாய்வு அமைப்புகள் கைது செய்துள்ளன அல்லது விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளன” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ராகுலின், இந்தக் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த பினராயி விஜயன், காங்கிரஸும் ராகுல் காந்தியும் பாஜகவின் 'பி-டீம்' ஆக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், சபரிமலை தங்க கவசம் விவகாரம் குறித்து பினராயி விஜயன் கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கருத்துகளுக்கு மாறாக, இந்த விவகாரத்தின் விசாரணையை கேரள உயர் நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும், அந்த விசாரணையில் எந்தக் குறையையும் உயர் நீதிமன்றம் காணவில்லை என்றும் தெரிவித்தார்.
பினராயி விஜயன் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சி, 2026ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கேரளத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Kerala Chief Minister Pinarayi Vijayan on Saturday (March 21) strongly criticized the Congress and Rahul Gandhi as the BJP's 'B-team'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் போராட்டம்: காங்கிரஸ் ஆளும் கேரளத்தில் 5,000 பேர் மீது வழக்கு ஏன்? பினராயி விஜயன் கேள்வி!
தில்லியிலிருந்து விமானத்தை தவறவிட்ட பினராயி விஜயன்: கேரள இல்ல உபசரணை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்

கேரளம்: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




