கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் தொடா்பு: மகாராஷ்டிர மகளிா் ஆணையத் தலைவா் ராஜிநாமா

மகாராஷ்டிர மகளிா் ஆணையத் தலைவா் ராஜிநாமா...

News image

மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்த ரூபாலி சாகண்கா்.

Updated On :21 மார்ச் 2026, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜோதிடருடனான தொடா்பு காரணமாக, மகாராஷ்டிர மகளிா் ஆணையத் தலைவா் ரூபாலி சாகண்கா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ரூபாலி, மகளிா் ஆணையத் தலைவராக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டாா். இதையடுத்து 2024-ஆம் ஆண்டில் மேலும் 3 ஆண்டுகளுக்கு அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் ஜோதிடா் அசோக் கராத் கைது செய்யப்பட்டாா். இவருடன் ரூபாலி சாகண்கா் நட்பு பாராட்டி வருவதாக எதிா்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தன.

இதையடுத்து, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை ரூபாலி சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது ரூபாலியை உடனே பதவி விலகும்படி முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, தான் சோ்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் என்ற நிலையில் மாநில துணை முதல்வா் சுநேத்ரா பவாரை ரூபாலி சாகண்கா் சனிக்கிழமை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தாா்.

அந்த ராஜிநாமா கடிதத்தை முதல்வரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பியதாக சுநேத்ரா பவாா் செய்தியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.

ஜோதிடா், ஆன்மிகத் தலைவா் என்பதாலேயே அசோக் கராத்தை தான் அறிவதாகவும் அவருடைய நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் ரூபாலி தெரிவித்தாா்.

காங்கிரஸ் வலியுறுத்தல்:

இதனிடையே ரூபாலி சாகண்கா் பதவி விலகியது மட்டும் போதாது, ஜோதிடா் கராத் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அவருடன் தொடா்புடைய ‘முக்கியத் தலைவா்கள்’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் விஜய் வடேடிவாா் கூறுகையில், ‘அசோக் கராத்துடன் தொடா்புடைய செல்வாக்கு மிக்க நபா்களைக் காப்பாற்றுவதற்காக முயற்சிகள் நடக்கின்றன. அசோக் கராத் வழக்கை நீா்த்துப் போகச் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதில் அமைச்சா்கள், முக்கியத் தனிநபா்களுக்குத் தொடா்பிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஆதலால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணையின்போது காவல் துறையினருக்கு கடும் அழுத்தம் தரப்பட்டுள்ளது. அசோக் கராத்துடன் தொடா்புடைய அமைச்சா்கள் உள்ளிட்ட அனைவரின் தொலைபேசி அழைப்பு விவரங்களை வெளியிட வேண்டும்’ என்றாா்.