பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தில்லி கார் குண்டு வெடிப்பு: விசாரணைக்கு மேலும் 45 நாள் அவகாசம் நீட்டிப்பு!

தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை முடிக்க மேலும் 45 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News image

தில்லி கார் குண்டுவெடிப்பு

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 12:19 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை முடிக்க மேலும் 45 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் விசாரணையை முழுமையாக முடிக்க, மேலும் 45 நாள்கள் அவகாசம்கோரி, தேசிய புலனாய்வு முகமை (NIA) சார்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர் மாதவ் குரானா திங்கள்கிழமையில் (மார்ச் 23) மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டோர் மற்றும் புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, வழக்கை விசாரிக்க என்ஐஏ-க்கு மேலும் சில கால அவகாசம் தேவைப்படுவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்த மனுவை விசாரித்த சிறப்பு என்ஐஏ நீதிபதி பிரசாந்த் சர்மா, என்ஐஏ-க்கு மேலும் 45 நாள்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். முன்னதாக, பிப்ரவரி 13-ல் விசாரணைக்கான கால அவகாசம் 45 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டப்படி, விசாரணைக்கான அசல் கால அளவு 90 நாள்கள். விசாரணைக் காலத்தை 180 நாள்கள் வரையில் நீட்டிக்கலாம். என்ஐஏ இரண்டாவது முறையாக கால நீட்டிப்பைக் கோரியுள்ளது.

Summary

Court grants 45 days more to NIA to complete investigation in Delhi blast case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.