காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் இடதுசாரி அரசு! - ராகுல் காந்தி

மோடியின் கட்டுப்பாட்டில் பினராயி விஜயன்..! - ராகுல் விமர்சனம்

Lok Sabha LoP Rahul Gandhi speaks during a public rally, at KSRTC Junction, in Adoor on Monday. (AICC/ANI Photo)

ராகுல் - ANI

Published On :

கேரளத்தில் இடதுசாரி அரசைப் போல் ஆளுங்கட்சி செயல்படவில்லை என்று ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களைச் சுமத்தியிருக்கிறார்.

கேரளத்தில் வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு, ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎஃப்) அதிகார நாற்காலிக்கான போட்டியில் முன்னிலை வகிக்கின்றன.

கேரள தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பத்தனம்திட்டா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசியதாவது, “இடதுசாரி முன்னணி முழுக்க முழுக்க பாஜக ஆதரவுடன் செயல்படுகிறது. இடதுசாரி முன்னணி கேரளத்தில் ‘ஓர் இடதுசாரி முன்னணி’ போல செயல்படவில்லை. அவர்கள் ஒருபோதும், ஒரு இடதுசாரி அரசாக இல்லவேயில்லை; ஆனால், கார்ப்பரேட் நிதியுதவி பெறும் ஓர் அரசாக இருக்கின்றனர்.

இங்கு பாஜக ஆதரவுடன் உள்ள இடதுசாரி முன்னணியை எதிர்த்து தேர்தலில் நாங்கள் போராடுகிறோம். ஒருபக்கத்தில், ஐக்கிய ஜனநாயக முன்னணி, இன்னொரு பக்கத்தில் இடதுசாரி முன்னணி மற்றும் பாஜக இணைந்த அணி. கேரளத்தில் தேர்தலில் பாஜகவின் ஒரு ரகசிய கை ஓங்கி நிற்கிறது. அவர்கள் ஐக்கிய ஜனநாயக முன்னணி இங்கு வேண்டாமென விரும்புகிறார்கள். ஏனென்றால், இந்த நாட்டில் அவர்களுக்கு சவால் அளிக்கும் ஒரே சக்தி காங்கிரஸ் கட்சி என்பது அவர்களுக்கு தெரியும்.

பாஜகவுக்கு ஒன்று தெரியும். தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தால், கேரளத்தில் எந்த இடதுசாரி அரசு அமைந்தாலும் அதை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்பது அவர்களுக்கு தெரியும்.

இதற்கான முதல் ஆதாரம், பாஜகவை எதிர்ப்பவர்கள் அவர்களால் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். என் மீதே தாக்குதல் நடந்திருக்கிறதே, எனக்கெதிராக 36 வழக்குகள் உள்ளன. ஆனால், கேரள முதல்வர் மீது பாஜகவிலிருந்து எந்தவொரு தாக்குதலும் இல்லை.

எப்படி டொனால்ட் டிரம்ப்பால் நரேந்திர மோடி சமரசம் செய்துகொள்ளச் செய்யப்பட்டார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்த விஷயமோ, அதைப்போல், நரேந்திர மோடி இங்குள்ள முதல்வரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். பினராயி விஜயன் தாம் செய்த முறைகேடுகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்” என்றார்.

Summary

Rahul Gandhi criticizes Kerala CM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.